ஸ்மார்ட் நகரங்கள், நிலைபேறான வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆய்வுகள் மற்றும் நடைமுறை ஆய்வுகளை உலகளாவிய நிபுணர்ணகள் வழங்குவர்
- தனது ஏழாவது ஆண்டைக் குறிக்கும் வகையில், மெய்நிகர் உச்சிமாநாட்டை அன்று எதிர்வரும் டிசம்பர் 08, 2021 முதல் ‘PropertyGuru Week’ இடம்பெறும் ஜனவரி 08, 2022 வரை இடம்பெறும்
- இவ்வாண்டு நிகழ்ச்சி நிரல், தரவு விஞ்ஞானத்தின் முக்கியத்துவம் மற்றும் ரியல் எஸ்டேட்டின் புத்தாக்கம் (data science and innovation in real estate), அத்துடன் கொவிட்-19 இற்குப் பின்னரான சந்தைகளின் பொருளாதார மீட்பு மற்றும் மீள் கண்டுபிடிப்பு தொடர்பில கவனம் செலுத்தும்.
- உலக வங்கி, International Finance Corporation (IFC), The Economist Intelligence Corporate Network, Milken Institute, Original Voice of Siri ஆகியவற்றால் முக்கிய விளக்கங்கள் இடம்பெறும்.
- சொத்து தொழில்நுட்பம் (proptech) இல் அடுத்த பெரிய விடயத்திற்கான PropertyGuru Tech Innovation விருது மற்றும் Visionary of the Year விருது பெறும் முதல் பெண் ஆகியன தொடர்பான விளக்க நிகழ்வுகள்
தென்கிழக்காசியாவின் முன்னணி சொத்து சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru, அதன் தொழில்நுட்பம் மற்றும் சிந்தனை தலைமைத் தளமான, PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாட்டின் இரண்டாவது இணையவழி பதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறது.
ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பத் தொழில்துறைகளில் மிகச்சிறந்த எண்ணங்களையும், உயர்மட்ட வணிகத் தலைவர்களையும், முடிவெடுப்பாளர்களையும் ஒன்றிணைத்து இடம்பெறும், PropertyGuru ஆசியா ரியல் எஸ்டேட் உச்சி மாநாட்டின் இணைய வழி பதிப்பு எதிர்வரும் டிசம்பர் 08, 2021 புதன்கிழமை, asiarealestatesummit.com வழியாக நேரடியாக, பார்வையாளர்களுடன் நேரடி கருத்தாடல்களுக்கான வசதிகளை உள்ளடக்கியவாறு, ஜனவரி 08, 2022 சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இந்த இணைய வழி உச்சிமாநாட்டில் உலகளாவிய வல்லுனர்களின் முக்கிய விளக்கவுரைகள், நிபுணர்களின் கலந்துரையாடல்கள், ஊடாடல்கள் மற்றும் குழு நிலை விவாதங்கள் போன்றன இடம்பெறவுள்ளன.
இவ்வாண்டு கலந்துலையாடலானது, ரியல் எஸ்டேட் துறையில் “தரவு புரட்சி” (Data Revolution), நிலைபேறுதன்மை, அணுகக்கூடிய தரவு, பசுமை நிதி, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள், தொலைநோக்கு மற்றும் தொடக்க நிறுவனங்களின் புத்தாக்கம் பற்றிய விவாதங்களை மையமாக கொண்டிருக்கும். Quantum Thailand Ltd நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும், துபாயின் பேர்ஜ் கலீபா, சபை முன்னாள் உறுப்பினருமான Stephen Oehme தலைமையில், PropertyGuru ஆசிய ரியல் எஸ்டேட் உச்சி மாநாட்டின் இணைய வழி பதிப்பு 2021 இடம்பெறவுள்ளது. தரவு விஞ்ஞானத்தின் (data science) ஆற்றல் மற்றும் அதன் பல்துறை பயன்பாடுகள் பற்றி விரிவான அறிவைக் கொண்ட வல்லுனர்கள், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் நிலைபேறு தொடர்பில் விளக்கமளிக்கக் கூடிய பிரபலமானவர்கள் பிரதான மேடையில் வலம் வருவர்.
தொற்றுநோய்க்கு பின்னரான ஆசியாவின் பொருளாதாரத்தின் மீட்பு மற்றும் அது தொடர்பான மீள் கண்டுபிடிப்பு தொடர்பில் முக்கிய உரையாடலை, The Economist Intelligence Corporate Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா பணிப்பாளர், Dr. William Thomas (PhD) ஆரம்பித்து வைப்பார். Siri இன் அசல் குரல் தொடர்பில் முக்கியத்துவம் பெற்ற சிரேஷ்ட குரல் வல்லமையாளரான Susan Bennett, “Becoming the Voice of AI” (செயற்கை நுண்ணறிவின் குரலாக மாறுதல்) எனும் தலைப்பில் சர்வதேச ரீதியிலான விள்கவுரையை வழங்குவார். Milken Institute இன் ஆசியாவிற்கான தற்போதைய சிரேஷ்ட உறுப்பினரும், யூடியூப்பில் “Asia Minute” இனை தொகுத்து வழங்குபவரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்க தூதுவருமான Curtis S. Chin, கொள்கை ரீதியான முக்கிய விளக்க கலந்துரையாடலை வழங்குவார். அதன் பின் ஆசியாவின் நகர்ப்புற மீண்டெழுதல் தொடர்பில் விவாதிப்பதற்கான பங்காளர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் இணைவார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்டட மீளெழுச்சி சுட்டி தொடர்பில், உலக வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, International Finance Corporation நிறுவனத்தில் பசுமை கட்டடங்களுக்கான சிரேஷ்ட தொழில்துறை நிபுணரான Ommid Saberi முக்கிய உரையை வழங்குவார்.
ஜப்பானை தளமாகக் கொண்ட Privacy by Design Lab இனது இணை நிறுவுனர், Kohei Kurihara, தரவுத் தனியுரிமை மற்றும் நெறிமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும், ஓரிரண்டு விளக்க ஆய்வுகள் தொடர்பிலும் இம்மெய்நிகர் உச்சிமாநாட்டில் ஆராயப்படும். Enter Projects இனது நிறுவுனரும் புகழ்பெற்ற வடிவமைப்பாளருமான Patrick Keane, “The Age of 3D” தொடர்பில் உரையாற்றுவார். இங்கு 3D அச்சிடல் அல்லது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டடக்கலை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் (R&D) எவ்வாறு நிலைபேறான, தொழில்நுட்ப உதவியுடன், தரவு சார்ந்த வடிவமைப்புகளை செயல்படுத்துகின்றன என்பது தொடர்பில் அவர் ஆராய்வார். மலேசியாவின் Lendlease நிறுவன நிலைபேறுதன்மை பணிப்பாளர் Yasmin Rasyid, கோலாலம்பூரின் The Exchange TRX திட்டம் பற்றியும், அது மலேசியாவின் புதிய நிதி மாவட்டத்தில் நிலைபேறுதன்மை கட்டமைப்பிற்குள் எவ்வாறு பொருந்துகிறது என்பது தொடர்பிலும் விளக்கமளிப்பார்.
ESCA Incorporated நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, பிலிப்பைன்ஸின் Jean Jacqueline de Castro, “Women who lead and build” (தலைமைத்துவம் மற்றும் கட்டமைக்கும் வல்லமை கொண்ட பெண்கள்”) எனும் விடயம் தொடர்பில், தாய்லாந்தின் Kotchakorn Voraakhom உடன் கலந்துரையாடலை (fireside chat) மேற்கொள்வார். Kotchakorn Voraakhom, Pourous City Network நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரியும், அதன் நிறுவுனருமாவார் என்பதுடன், Climate Change Working Group, International Federation of Landscape Architects, World (IFLA World) இனது தலைவருமாவார். நமது நகரங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலை சிறப்பாகத் திட்டமிடுவதற்கான கருவிகள் பற்றி அவர் விளக்கமளிப்பார். 2019 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க TIME100 Next பட்டியலில் இடம்பெற்ற திருமதி Kotchakorn Voraakhom, ஆண்டின் PropertyGuru விருதைப் பெறும் முதல் பெண் விருது பெறுநர் ஆவார். இது இவ்வாண்டின் உச்சிமாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைகின்றது.
2021 PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாட்டின் முழு நாள் நிகழ்வின், இணைய வழி பதிப்பானது, பல்வேறு தனித்தனியான பிரிவுகளை கொண்ட, எண்ணங்களை பரிமாறும் ஊடாடல் அம்சத்தை கொண்டதாக அமைகின்றது. இவை தரவு உள்ளடக்கங்கள், அணுகக்கூடிய தரவு, நிலைபேறான வளர்ச்சி, தரவு புத்தாக்கம் பற்றியதாக அமையவுள்ளதுடன், துறைசார் நிபுணத்துவ பேச்சாளர்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. குறிப்பாக, Asia MarTech Society இனது நிறுவுனரும் PropertyGuru Asia Property Awards (Mainland China) இனது தலைவருமான Ken Ip; Lendlease நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும் மலேசியாவுக்கான தலைவருமான Stuart Mendel; podcast தொகுப்பாளரும், தாய்லாந்தின் பெங்கொக்கில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டு PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாட்டின் தொகுப்பாளருமான Tina Ryan; ஸ்மார்ட் பார்க்கிங் தொழில்நுட்ப நிகழ்வில் தோன்றவுள்ள IHI இன் இணை பணிப்பாளர், Masaya Fujisawa ஆகியோர் இந்நிகழ்வை அலங்கரிக்க உள்ளனர்.
இது தவிர, PropertyGuru Group தலைமைத்துவத்தின் பிரத்தியேக விளக்கக்காட்சி நிகழ்வுகளும் இதில் இடம்பெறவுள்ளன. குறிப்பாக Tech Innovation Award இனது பிரதான தொழில்நுட்ப அதிகாரியும் தலைவருமான Manav Kamboj; PropertyGuru Asia Property Awards மற்றும் Asia Real Estate Summit நிர்வாக பணிப்பாளர் Jules Kay; Milken Institute இன் Curtis S. Chin உடன் உடன் கலந்துரையாடலில் இணையும் மூலோபாய பணிப்பாளர் Mallika Gadepall ஆகியோர் பங்குபற்றுகின்றனர். அத்துடன் PropertyGuru குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் நிர்வாக பணிப்பாளருமான ஹரி Hari V. Krishnan இனால், ஆசிய சொத்து துறையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான “GuruTalk” நிகழ்வும் இடம்பெறும்.
டிக்கெட்டுகள் தற்போது விற்பனையில்
PropertyGuru Asia Real Estate Summit இன் இணைய வழி பதிப்பிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, நவம்பர் 07, 2021 வரை முன்னுரிமை சலுகைகள் வழங்கப்படுவதோடு, உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தும் மாணவர்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்படவுள்ளன.
தொழில்நுட்ப புத்தாக்க விருதுகளுக்கான விண்ணப்பங்களுக்கு வாய்ப்பு
செப்டெம்பர் 2021 முதல், PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாடு அதன் வருடாந்த தொழில்நுட்ப புத்தாக்க விருதுக்கான விண்ணப்பங்களை ஏற்க ஆரம்பித்துள்ளது. இதில் சொத்து தொழில்நுட்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, தாக்கத்தை உண்டாக்கும் யோசனைக்கான Tech Innovation Award வழங்கப்படுகிறது. ரியல் எஸ்டேட்டில் உள்ள சிக்கல் அல்லது பிரச்சினைகளை அவர்களது தொழில்நுட்பம் அல்லது புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து, உலகளாவிய நிபுணர்களின் சுயாதீன நடுவர் குழுவால் விண்ணப்பங்கள் ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்படும். பொறியியல் பயன்படுத்தப்பட்ட மூங்கில் மரக்கட்டைகளை கட்டுமானத்தில் முதன்மைப் பொருளாகப் பயன்படுத்தியதற்காக 2020 இல் Rizome இற்கு PropertyGuru Tech Innovation விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. துருக்கி மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் Sensgreen இனால், அளவிடக்கூடிய செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் (AI-powered) உள்ளக சென்சர் தொழில்நுட்பத்திற்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் அமைந்துள்ள தொடக்க நிறுவனமான Igloohome இற்கு ஸ்மார்ட் பூட்டு (smart locks) இற்காக 2018 இல் முதலாவது விருதை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
PropertyGuru தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருது 2021 விருதுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க: AsiaRealEstateSummit.com/award/
Webinar Series மற்றும் Digital White Paper
PropertyGuru Asia Real Estate Summit ஆனது 2021 இல் அதன் ஏழாவது பதிப்பை மேற்கொள்கிறது. ரியல் எஸ்டேட் தொழில்துறை தலைவர்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், ஆசிய பசிபிக் தொலைநோக்கு பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய தளமான இதன் உச்சி மாநாடு, அதன் உத்தியோகப்பூர்வ தளமான AsiaRealEstateSummit.com இன் மீளமைப்பை தொடர்ந்து ஜூலை மாதம் உச்சத்தை தொட்டது.
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக அல்லது அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்: AsiaRealEstateSummit.com/
–END–
Comment here