நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளன.
பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையும் தனது தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்த நிலங்களை மீண்டும் பயிரிட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதுடன், இதன் விளைவாக தேசிய திட்டமான “வகா சௌபாக்கிய” ஆரம்பிக்கப்பட்டது. “வகா சௌபாக்கிய” 2020 இன் தேசிய நிகழ்வு கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ இயந்திர பங்காளரான DIMO நிறுவனம் Mahindra Yuvo உழவு இயந்திரங்களை, கைவிடப்பட்ட நிலங்களை தயார்படுத்தும் பொருட்டு வழங்கியதன் மூலம் இம் முயற்சியின் தொடக்கத்தை வலுவூட்டியது.
அரசாங்கத்தின் முயற்சியானது இலங்கையர்களிடையே சமூகப் பொறுப்பை ஊக்குவித்துள்ளதுடன், நாட்டின் இளைஞர்கள் அதன் பின்னால் அணிதிரண்டு வருவதையும், பொறுப்பைத் தாங்கிக் கொண்டு தரிசு நிலங்களை பயிரிடுவதில் அர்ப்பணித்துள்ளமையும் மிகவும் பாராட்டத்தக்கது. “Mr. Farmer” இன் ஸ்தாபகரான யுரேஸ் எரங்க, தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடுவதில் ஈடுபட்டுள்ள இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆர்வமுள்ள விவசாயிகளில் ஒருவராவார். இந்த நிலங்களில் அவர் சேதன பயிர்ச்செய்கை செயல்முறையை நடைமுறைப்படுத்தி, சேதன அரிசியை உற்பத்தி செய்து “Mr. Farmer” என்ற வர்த்தகநாமத்தின் கீழ் சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் இயங்கி வருகின்றார்.
DIMO ஏற்கனவே “Mr. Farmer” உடன் இணைந்து மாலபேவில் உள்ள 12 ஏக்கர் கைவிடப்பட்ட நிலத்தை பயிரிடும் பொருட்டு, அந்த இடங்களை தயார்படுத்த Mahindra Yuvo உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. பொறுப்பான கூட்டாண்மை என்ற வகையில், “Mr.Farmer” இற்கு இயந்திர உதவியுடன், தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் வழங்க DIMO எதிர்ப்பார்ப்பதோடு, மேலும் நிலங்களை மீண்டும் பயிரிட அவர்களை ஊக்குவிக்கின்றது.
இலங்கை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் விவசாயத் துறைக்கு பெரும் ஆற்றல் உள்ளது. கைவிடப்பட்ட விவசாய நிலங்களை நாடு மீண்டும் பயிரிடுவதும், விவசாயத் துறையில் வள முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முக்கிய காரணியாகும். இந்த முயற்சிக்கு உதவுவதில் DIMO பெருமையடைகின்றது,” என DIMOவின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே தெரிவித்தார்.
“Mahindra நாம் மற்றும் DIMO விவசாய இயந்திர பிரிவில் உள்ள குழுவினர் மஹிந்திராவின் அடுத்த தலைமுறை உழவு இயந்திரங்களை இளைஞர்களுக்கு “வகா சௌபாக்ய” திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதோடு, நவீன உழவு இயந்திரங்கள் அனைத்து சரியான பண்புகளையும் கொண்டு, உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டன, ஏனெனில் இலங்கையில் உள்ள இளைஞர்கள் நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். DIMO இலங்கையில் Mahindraவின் ஒரேயொரு பங்காளராகும். அவர்களுடன் இணைந்து, ‘வகா சௌபாக்கிய’ முயற்சியை ஆதரிப்பதில் நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என இந்த முயற்சி தொடர்பில் Mahindra மற்றும் Mahindra Ltd இன் சர்வதேச செயற்பாடுகள் (தெற்காசியா) – உப தலைவர், சஞ்சே ஜாதவ் தெரிவித்தார்.
“இளைஞர்களிடமிருந்தான இந்த உத்வேகம் ஏற்கனவே நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டால், அவர்கள் ஒரே நாடாக அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை தொடரும் ஆற்றலைக் கொண்டவர்கள்,” என DIMOவின் Retail Cluster இற்கான பிரதான செயற்பாட்டு அதிகாரி, விரங்க விக்ரமரத்ன தெரிவித்தார்.
“தேசிய முயற்சியை ஆதரிப்பதற்கு அப்பால், நம் நாட்டை மீண்டும் தன்னிறைவு அடையச் செய்ய இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் DIMOவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன், என Mr. Farmer இன் ஸ்தாபகர் யுரேஸ் எரங்க தெரிவித்தார்.
“கைவிடப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் தயார்படுத்துவதற்கான செலவானது, மீண்டும் பயிரிடுவதற்கான மொத்த செலவில் கிட்டத்தட்ட 50% ஆகும். எனினும் இயந்திர பங்காளராக எங்களுக்கு உதவ DIMO முன் வந்ததால், திட்ட செலவுகளை குறைக்க முடிந்தது. மேலும், Mahindra Yuvo உழவு இயந்திரகளின் மூலம் நிலத்தை தயார்படுத்தும் பணியை துரிதப்படுத்த முடிந்ததுடன், நேரத்தையும் எம்மால் சேமிக்க முடிந்தது,” என எரங்க மேலும் தெரிவித்தார்.
DIMO விவசாய இயந்திரப் பிரிவு விவசாயத் துறையில் அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதுடன், உள்ளூர் விவசாயிகளை தேவையான உபகரணங்கள் மற்றும் பெறுமதியான அறிவுடன் வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் விவசாயத்தை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் உள்ளது.
DIMO இலங்கையில் பிரபலமான Mahindra உழவு இயந்திரங்கள் மற்றும் CLAAS harvesters இன் ஏக விநியோகஸ்தராக உள்ளது. இந்த நிறுவனம் விற்பனைக்குப் பின்னரான சிறந்த தரமான சேவையையும், சான்றளிக்கப்பட்ட உண்மையான உதிரி பாகங்களையும் வழங்குவதில் பெயர் பெற்றது.
DIMO தொடர்பில்
டிமோ பல தொடர்புபட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் பல பெறுமதியான வர்த்தக நாமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. Mercedes-Benz, Siemens, Jeep, KSB, TATA Motors, MTU, Komatsu, Michelin, Zeiss, MRF, Bomag, Claas, thyssenkrupp, Mahindra Tractors மற்றும் Stanley அவைகளில் சிலவாகும். வாகனங்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருந்த DIMO, இன்று பல துறைகளுக்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பொறியியல், கட்டிட முகாமைத்துவ அமைப்புகள் மற்றும் சேவைகள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், பொருள் கையாள்கை, சேமிப்பக மற்றும் களஞ்சியப்படுத்தல் தீர்வுகள், மின் கருவிகள், விவசாய உபகரணங்கள், மொத்த ஒளியூட்டல் தீர்வுகள், மின் அமைப்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள், குளிரூட்டல், கப்பல் பழுது மற்றும் ஓட்டுநர் பயிற்சி பாடநெறிகள் ஆகியன கடந்த சில தசாப்தங்களில் DIMO நுழைந்துள்ள துறைகளாகும். DIMO அண்மையில் உரம் மற்றும் விவசாய உள்ளீட்டு சந்தையிலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. மாலைத்தீவு மற்றும் மியான்மாரில் உள்ள வெளிநாட்டு சந்தைகளில் DIMO வெற்றிகரமாக நுழைந்தது. கடற்சார் மற்றும் பொது பொறியியல் சேவையை மாலைத்தீவில் உள்ள தமது பங்காண்மைகள் ஊடாக விரிவுபடுத்தியன் மூலமும், ஒட்டோமொபைல் மற்றும் ஒட்டோமொபை சேவை வழங்கல் பிரிவுகளின் ஊடாக மியன்மாரிலும் கால் பதித்தது. DIMO தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் புதிய சந்தைகளுடன் தற்போதைய வெளிநாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க செயல்பட்டு வருகிறது.
Comment here