Uncategorised

Hemas Consumer இலங்கையில் L’Oréal உடன் கூட்டிணைந்து அதன் துறைகளை வலுவூட்டுகிறது

இலங்கையின் அழகியல் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் முன்னணி உற்பத்தியாளரும் விநியோகத்தருமான Hemas Consumer, உலகின் முதல்தர அழகுசாதன நிறுவனமான L’Oréal உடனான பாரிய கூட்டிணைவின் மூலம் அதன் துறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம் Hemas Consumer அதன் விற்பனை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான விநியோகத்தர் உரிமைகளை பெற்றுள்ளதுடன், புதுமையான சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள் மூலம் L’Oréal இன் பரந்த அளவிலான அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை இலங்கை முழுவதும் சென்றடைவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.

தற்காலத்தில் நுகர்வோரிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், மக்கள் தாங்கள் பயன்படுத்தும் தரக் குறியீடுகளையே கோருகிறார்கள். உயர் தரமான மற்றும் நம்பகமான தயாரிப்புகள் மூலம், தங்கள் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். நுகர்வோர் விருப்ப தயாரிப்புகளை வழங்குவதில் 110 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான சிறப்புத் தன்மை கொண்ட L’Oréal இன், மிக உயர் தரமான தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, ஒப்பனைகள், சூரியக்கதிர் பாதுகாப்பு தயாரிப்புகள் மற்றும் வாசனை திரவியங்களை, இலங்கையர்கள் தற்போது ஹேமாஸ் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய கூட்டிணைவு தொடர்பில் Hemas Consumer நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும், ஹேமாஸ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான, சிறியான் டி சில்வா விஜயரத்ன தெரிவிக்கையில், “இலங்கையில் வெற்றிகரமானதும் வலுவானதுமான நுகர்வோர் வர்த்தகக் குறியீடுகளை உருவாக்குவதற்காக நாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை செலவிட்டுள்ளோம். நுகர்வோர் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை எனும் எங்கள் வாக்குறுதியின்படி, L’Oréal போன்ற உலகத் தரம் வாய்ந்த அழகுசாதனக் குழுவுடன் கூட்டாளர்களாக இணைவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். தற்போதுள்ள எமது துறைகளுடன், உலகின் மிகவும் விரும்பப்படும் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை இணைத்துள்ளதன் மூலம் நாம் மேலும் அதில் விரிவாக்கமடைந்துள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவைகளை வழங்குவதற்காக, நாடு முழுவதும் விற்பனைப் பிரிவுகளை கொண்டுள்ளதன் மூலம், எமது விநியோக செயல்பாட்டில் நாம் நன்கு உறுதியடைந்துள்ளோம். இந்த கூட்டாண்மையானது, இலங்கையின் அழகு பராமரிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புவதுடன், L’Oréal உடன் இணைந்ததான எமது பயணத்தில் தொடர்ந்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நாம் நம்புகிறோம்.” என்றார்.

Hemas Consumer வணிக அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் சப்ரினா ஈசுபலி தெரிவிக்கையில், “இந்த கூட்டாண்மை மூலம், L’Oréal இன் பல ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட உயர்தர தரக்குறியீட்டு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை இலங்கையர்களால் அணுக முடியும். வேகமாக வளர்ந்து வருகின்றதும் ஆற்றல் மிக்கதுமான அழகுத் துறையில், ஹேமாஸின் உள்நாட்டு பாரம்பரியம் மற்றும் ஆழமான ஊடுருவல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமை மற்றும் L’Oréal இன் உலகளாவிய தொழில்நுட்பம், நம்பிக்கை ஆகியன, நுகர்வோரை திருப்திப்படுத்துவற்கான சரியான கலவையாகும்.” என்றார்.

முதற்கட்டமாக, L’Oréal இன் மிகவும் பிரபலமான தரக்குறியீடுகளான L’Oréal Paris, Garnier, Maybelline ஆகியன, நாடு முழுவதும் உள்ள பொதுவான வர்த்தக நிலையங்கள், நவீன வர்த்தக நிலையங்கள் மற்றும் இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கவுள்ளதுடன், இக்கூட்டாண்மையின் வளர்ச்சியுடன் இத்தாயரிப்புகள் மேலும் விரிவடையவுள்ளது.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆனது, Hemas Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 1948 இல் நிறுவப்பட்ட ஹேமாஸ், குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று, 4,500 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இம்முன்னணி மக்கள் மைய நிறுவனம், நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வருகிறது. Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து வருவதோடு, அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றி கொள்கிறது.

L’Oréal பற்றி

L’Oréal ஆனது 100 ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்கலை துறையில் தன்னை அர்ப்பணித்துள்ளது. 36 மாறுபட்ட மற்றும் துணை தரக்குறியீடுகளின் தனித்துவமான சர்வதேச தயாரிப்புகள் மூலம், இக்குழுமமானது, 2019 ஆம் ஆண்டில் 29.87 பில்லியன் யூரோ விற்பனையை மேற்கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 88,000 ஊழியர்களைக் கொண்டுள்ள, உலகின் முன்னணி அழகுத் துறை நிறுவனமாகிய, L’Oréal ஆனது, பல் சந்தைகள், அங்காடிகள், மருந்தகங்கள், சலூன்கள், பயண சில்லறை விற்பனை நிலையங்கள், புகழ்பெற்ற சில்லறை மற்றும் இலத்திரனியல் வணிகங்கள் உள்ளிட்ட அனைத்து விநியோக வலையமைப்புகளிலும் காணப்படுகின்றது.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பில் 4,100 பேர் கொண்ட L’Oréal இன் பிரத்தியேக ஆராய்ச்சிக் குழுவானது, L’Oréal இன் மூலோபாய மையமாக விளங்குகின்றது. இது உலகம் முழுவதும் அழகிற்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்வதனை நோக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறது. L’Oréal ஆனது, அதன் குழுமம் முழுவதும் 2030 ஆம் ஆண்டில் அதன் இலட்சிய நோக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கியதாக திட்டமிட்டுள்ளதுடன், அதன் சுற்றாடல் தொகுதியை மேலும் விரிவானதும், நிலைபேறான சமுதாயத்தை விருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதி தகவலுக்கு: https://mediaroom.loreal.com/

Comment here