Uncategorised

Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை மீண்டும் இலங்கையில் – பிரம்மாண்டமானதும் சிறப்பானதும்

– 2021 மே 5 முதல் தொடர்ச்சியாக 8 நாட்களுக்கு

இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் மிகப் பெரும் புத்தக விற்பனை நிகழ்வான, Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை (பிக் பேட் வுல்ஃப்), இலங்கை முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்காக, மே 05 – 12 வரை மீண்டும் களைகட்டப் போகிறது.

இந்த ஒன்லைன் புத்தக விற்பனையின் இரண்டாம் நிகழ்வானது 2021 ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவ்வூடகவியலாளர் சந்திப்பானது, Pro Read Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும் இலங்கையின் Big Bad Wolf புத்தகங்களுக்கான பங்குதாரருமான நிஷான் வாசலதந்திரியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில், Big Bad Wolf Books இன் இணை நிறுவுனர்களான, ஜக்குலின் என்ஜி, அன்ட்ரூ யப் ஆகியோர் இணைந்து கொண்டதோடு, இலங்கையின் Big Bad Wolf Books பங்குதாரரான தீபக் மாதவன் கோலாலம்பூரிலிருந்து வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த Pro Read Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும் இலங்கையின் Big Bad Wolf புத்தகங்களுக்கான பங்குதாரருமான நிஷான் வாசலதந்திரி, “உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனையான இந்நிகழ்வு, கொவிட்-19 தொற்று சவால்கள் காரணமாக ஒன்லைனில் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளது. மலேசியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இத்தொற்றுநோய் பரவல் காரணமாக, அந்நாட்டில் இன்னும் பயணக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் இவ்வாறான கடினமான வேளையிலும், Big Bad Wolf Books ஆனது, தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கும் அதன் இரசிகர்களுக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அவர்களது வீடுகளிலிருந்தவாறே பாதுகாப்பாகவும் வசதியாகவும் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான தெரிவை அவர்களுக்கு வழங்கியுள்ளது.” என்றார்.

Big Bad Wolf Books இணை நிறுவுனரான அண்ட்ரூ யப் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “தரமான ஆங்கிலப் புத்தகங்களை மிக மலிவான விலையில் வழங்குவதன் மூலம் அதனை அனைவரும் அடைய வேண்டுமெனும் நோக்கத்தை கொண்டுள்ள நாம், இலங்கையில் உள்ள அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம். எமது இரண்டாவது ஒன்லைன் புத்தக விற்பனையுடன், இவ்வருடம் ஐந்தாவது முறையாக இலங்கைக்குத் திரும்பியுள்ளோம். ஒன்லைனில் அதிகமானவர்களைச் சென்றடைவதன் மூலம் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கான எமது பணியைத் தொடர்வதில் ​​மகிழ்ச்சியடைவதோடு, அதில் தொடர்ந்தும் ஆர்வமாகவும் இருக்கின்றோம்.” என்றார்.

Big Bad Wolf Books இணை நிறுவுனரான ஜக்குலின் என்ஜி இது தொடர்பில் விபரிக்கையில், “Big Bad Wolf Books விற்பனையின் ஒத்த கருத்தாக அதன் அபூர்வ தள்ளுபடியை கூறலாம். அது வாக்குறுதியளித்தபடி, இதில் 90% வரையான தள்ளுபடியை புத்தக ஆர்வலர்கள் எதிர்பார்க்கலாம் என்பதோடு, குறைந்தபட்சமாக ரூ. 9,000 இற்கு கொள்வனவு செய்பவர்களுக்கு, புத்தகங்களை அனுப்பி வைப்பதற்கான கட்டணம் அறவிடப்படாது என்பதுடன் பல்வேறு பரிசுகளை பெறுவதற்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு அற்புதமான சலுகைகளை இவ்விற்பனை கொண்டு வருகின்றது. புத்தக ஆர்வலர்களைப் போன்று, பாடசாலை சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாசிப்புக்கான அம்சங்களை பெற்றுக் கொள்வதற்காக, Big Bad Wolf Books விற்பனை எப்போது ஆரம்பிக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எம்மால் அறிய முடிகின்றது” என்றார்.

பல்வேறு தள்ளுபடிகளுக்கு அப்பால், இவ்வாண்டின் ஒன்லைன் விற்பனையில், Wolf அதன் இரசிகர்களுக்கு அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக, 10% விலைக்கழிவை குறைந்தபட்சம் ரூ. 17,000 இற்கான கொள்வனவுகளுக்கும் [உச்சபட்சமாக ரூ. 1,700] முதலாவது ரூ. 1,000 கழிவுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது; ‘ஒன்றின் விலைக்கு 2 வழங்குதல்’, ‘இரண்டின் விலைக்கு 3 ஐ வழங்குதல்’ உள்ளிட்ட சலுகைகளையும் அது கொண்டுள்ளது. அத்துடன், Big Bad Wolf Books ஆனது, சம்பத் வங்கி மற்றும் TNL Radio வலையமைப்புடனும் கூட்டிணைந்து பிரத்தியேகமான சலுகைகள் மற்றும் போட்டிகள் மூலமான பரிசுகளையும் வழங்கவுள்ளது. சம்பத் வங்கி கடனட்டைதாரர்கள் ஒன்லைன் விற்பனையின் போது மேற்கொள்ளும் ரூ. 10,000 இற்கு அதிக கொள்வனவுகளை 3, 6, 12 மாத தவணைகளில் செலுத்தும் வகையில் மாற்றிக் கொள்ள முடியும். Lite87 மற்றும் TNL Now ஆகிய வானொலி இரசிகர்கள், விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட வானொலி போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் ரூ. 1,000 மதிப்புள்ள 20 இணைய வவுச்சர்களை வெற்றி கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை வலைத்தளமான www.bigbadwolfbooks.lk இற்கு செல்வதன் மூலம், மே 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் 2021 மே 12ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இவ்விற்பனையுடன் இணைந்து கொள்ளலாம். புத்தக ஆர்வலர்கள் Big Bad Wolf Books தொடர்பான பிந்திய விபரங்களை அதன் உத்தியோபூர்வ பேஸ்புக் பக்கம்: www.facebook.com/bbwbookssrilanka மற்றும்

இன்ஸ்டாகிராம் பக்கம்: www.instagram.com/bigbadwolfbooks_lk மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

BIG BAD WOLF BOOKS பற்றி

தங்களிடையே இருந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட அண்ட்ரூ யப் மற்றும் ஜக்குலின் என்ஜி ஆகியோர் முதன்முதலில் Big Bad Wolf Books புத்தக விற்பனையை மலேசியாவின் கோலாலம்பூரில், களஞ்சியசாலை ஒன்றின் விற்பனையாக 2009 இல் ஆரம்பித்தனர். சர்வதேச விநியோகத்தர்களிடமிருந்து பல்வேறு வகையான பெருமளவான் புத்தகங்களை அவர்கள் அதில் வழங்கினர். புத்தகங்களின் மலிவு விலை, எளிதில் கிடைக்கும் வகையிலான வசதி ஆகியன, அதன் மீது ஒரு பாரிய ஈர்ப்பை உருவாக்கியது. எப்போது ஆரம்பித்த போதிலும் Big Bad Wolf Books புத்தக விற்பனையானது, நாடு முழுவதும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியது.

பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலையில், 75% முதல் 95% வரையான தள்ளுபடியிலான, புத்தம் புதிய ஆங்கில புத்தகங்களை வழங்குதல், மலிவு, வாசிப்பை இலகுவில் அணுகக்கூடியதாக மாற்றியமை உள்ளிட்ட மகிழ்ச்சியை அனைத்து வயதினரிடையேயும் ஊக்குவிப்பதற்கான முதன்மை நோக்கத்துடனான Big Bad Wolf Books புத்தக விற்பனையானது, புனைக்கதை, புனைவல்லாத சிறந்த விற்பனை கொண்டவை, இளம் வாலிபர்களுக்கான புனைக்கதை, சிறுவர்களுக்கான புத்தகங்கள் என பரந்துபட்ட, விரிவான புத்தகங்களின் தொகுப்புகளை உள்ளடக்கியவாறு அனைத்து வகையான புத்தகங்களையும் தாங்கியதாக காணப்படுகின்றது.

இப்புத்தக விற்பனையானது, மலேசியாவின் பல்வேறு நகரங்களில் அதன் பயணத்தை மேற்கொண்டுள்ளதுடன், கம்போடியா, இந்தோனேசியா, கொரியா, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, இலங்கை, தாய்வான், தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் வெற்றிகரமாக அதன் கால்தடத்தை பதித்துள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள வாசகர்களுக்கு வாசிப்பை அடைவதை இலகுபடுத்தும் அதன் நோக்கம் காரணமாக அது தனது பயணத்தை நிறுத்த ஒரு போதும் நினைத்ததில்லை.

Comment here