Uncategorised

வாடிக்கையாளர் அனுபவத்திற்கு டிஜிட்டல் யுகத்திற்கு விரையும் DIMO

சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துமுகமாக DIMO, கடந்த சில மாதங்களில் ஏராளமான டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தியன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்தும் பொருட்டு பல திட்டங்களை செயற்படுத்தியது.

DIMO நிறுவனம், டிஜிட்டல் நிலைமாற்றத்தில் முதலீட்டை மேம்படுத்தும் மூலோபாய முடிவை எடுத்ததுடன், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களை பயன்படுத்தி மேம்பட்ட அனுபவத்துடன் ஏராளமான DIMO தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுக முடியும்,”என DIMOவின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே தெரிவித்தார்.  “இதன் விளைவாக, DIMO தனது வாடிக்கையாளர்களின் வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் மூன்று அதி நவீன டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்கி, செயற்படுத்தியது. இணையதளமான www.carsatdimo.lk,  மொபைல் செயலியான DeX Automotive  மற்றும் www.dimoretail.lk, இவை அனைத்தும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன,” என அவர் மேலும் தெரிவித்தார்.

DIMO அண்மையில் www.carsatdimo.lk  என்ற தனித்துவமான இணையதளத்தை ஆரம்பித்தது. இந்த இணையதளம்  புத்தம் புதிய மற்றும் முன்னர் ஒருவருக்கு சொந்தமான Mercedes-Benz மற்றும் Jeep வாகனங்களுக்கானதாகும். ஆர்வமுள்ள தரப்பினர் www.carsatdimo.lk விற்குள் பிரவேசிப்பதன் மூலம் இலங்கையின் முன்னனி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் விசேட நிதியீட்டு தெரிவுகளுடன், DIMO வழங்கும் சொகுசான புத்தம் புதிய மற்றும் முன்னர் ஒருவருக்கு சொந்தமான Mercedes-Benz மற்றும் Jeep  வாகனங்களின் முழு தயாரிப்பு தகவல்களை பார்வையிட முடியும். DIMOவில் கிடைக்கும் Mercedes-Benz மற்றும் Jeep  வாகனங்களின் முழு வரிசையினதும் அனைத்து முக்கிய விபரங்களையும் வருங்கால கொள்வனவாளர்கள் அறிந்துகொள்ள இந்த இணையதளம் தொந்தரவுகளற்ற வழியை வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் வாகனங்களின் புதுப்பித்த தரவுத்தளத்தில் உலாவ முடிவதுடன், பல சிறப்பு சலுகைகளையும் அனுபவித்து மகிழ முடியும். Mercedes-Benz  அல்லது Jeep வாகனத்தின் தற்போதைய உரிமையாளரொருவர், இது DIMOவிடமிருந்து அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், புத்தம் புதிய அல்லது முன்னர் ஒருவருக்கு சொந்தமான Mercedes-Benz அல்லது Jeep வாகனத்தை கொள்வனவு செய்யும் பொருட்டு மாற்றிக் கொள்ள முடியும். வாகன உரிமையாளர்கள் தேவை ஏற்படின் புதிய வாகனமொன்றை வாங்காமலும்,  தமது வாகனத்தை நிறுவனத்திலுள்ள நிபுணர்களின் மதிப்பீட்டின் பின்னர் இணையதளத்தின் ஊடாக DIMOவிற்கு விற்பனை செய்ய முடியும். தற்போதைய DIMO வாடிக்கையாளர்கள், அவர்களது பராமரிப்பு தொடர்பான பதிவுகள் நிறுவனத்திடம் இருப்பதால் தமது வாகனத்தை பரிசோதனைக்கு கொண்டு வராமல், பதிவு எண்ணை இணையதளத்தில் உள்ளிடுவதன் மூலம் DIMO இனால் பராமரிக்கப்படும் தமது வாகனத்தின் மதிப்பீட்டைக் கோரும் அனுகூலத்தைப் பெறுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தயாரிப்பு அல்லது சலுகை தொடர்பிலும் விசாரிக்கும் பொருட்டு,  ஒரு விற்பனை நிபுணரை நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு 24 மணி நேர துரித அழைப்பு மற்றும் ஒரு ‘WhatsApp’ எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Mercedes-Benz, Jeep மற்றும் Auto Lab clientele வாடிக்கையாளர்களுக்கு முதற்தர அனுபவத்தை வழங்கும் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃ போன் செயலியான DeX Automotiveவையும் DIMO வெளியிட்டது.

DeX Automotive செயலி என அழைக்கப்படும் DIMO Experience Automotive,  Mercedes-Benz, Jeep என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழு DIMO  வாடிக்கையாளர் அனுபவத்துக்கான அணுகலை, MercLife, JeepLife மற்றும் AutoLab பிரிவுகள் ஊடாக, Mercedes-Benz மற்றும் Jeep வாகனங்களின் இல்லமான DIMOவில் வழங்கப்படும் Mercedes-Benz | Jeep Luxury ஆடம்பர அனுபவத்தின் சுவையோடு  வழங்குகின்றது.

எதிர்கால வாடிக்கையாளர்களும் இந்த செயலியை தரவிறக்குவதன் மூலம் DIMO அனுபவத்தைக் கண்டறிய வரவேற்கப்படுகிறார்கள். Google Play Store மற்றும் Apple App Store  இலிருந்து DeX Automotive இச் செயலியை தரவிறக்கம் செய்ய முடியும்.

அண்மைய புத்தம் புதிய மற்றும் DIMO சான்றளிக்கப்பட்ட முன்னர் ஒருவருக்குச் சொந்தமான Mercedes-Benz, Jeep வாகனங்களைப் பார்வையிடுவது, விசேட விற்பனை ஆலோசகரைத் தொடர்பு கொள்வது, சோதனை ஓட்டத்துக்கான முன்பதிவு , சேவை முன்பதிவு மற்றும் ஒன்லைன் கொடுப்பனவுகள், அசல் Mercedes-Benz மற்றும் Jeep உதிரிப்பாகங்கள், துணைப்பொருட்கள் மற்றும் சேகரிப்புகள், அண்மைய Mercedes-Benz மற்றும் Jeep  நிகழ்வுகள் மற்றும் வீடியோக்களை அணுகுவது, பயணத்தின்போது Mercedes-Benz இசை மற்றும் வீடியோக்களை அணுக MercPlayவைப் பயன்படுத்துதல், உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளைப் பார்ப்பது மற்றும் இருப்பிட பகிர்வுடன் 24 மணிநேர வீதியோர உதவியைக் கோருதல் போன்ற பல பயனுள்ள சிறப்பம்சங்களை  இந்த செயலியானது வழங்குகின்றது. மேலும், AutoLab பிரிவானது ஏனைய அனைத்து பயணிகள் வாகன வர்த்தகநாமங்களுக்கும் சேவை முன்பதிவு மற்றும் ஒன்லைன் கட்டணங்களை  மேற்கொள்ள அனுமதிக்கிறது.

அத்துடன், DIMO ஆனது சர்வதேச புகழ் பெற்ற தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் வழங்கக்கூடிய முன்னோடி இணையதளமாக விளங்கும் தமது புதிய e-commerce தளமான www.dimoretail.lk வை அண்மையில் ஆரம்பித்துள்ளது. வீடு, சமையலறை ஒளியூட்டல், மின் உபகரணங்கள், இலத்திரனியல், தோட்டக்கலை, பவர் டூல்ஸ், கைக்கருவிகள், DIYகள், டயர்கள் மற்றும் ஒட்டோமோட்டிவ் தீர்வுகள் உள்ளிட்ட  பலதரப்பட்ட தினசரி பாவனைப் பொருட்களையும், தீர்வுகளையும் இந்த இணையதளத்தின் ஊடாக DIMO வழங்குகின்றது. இந்த முதற்தர ஒன்லைன் சந்தைத் தளமானது உயர்த்தர வர்த்தகநாமங்களான Black+Decker, Stanley, Siemens, STIHL, WD-40, Michelin, DIMO LUMIN, Penergetic உள்ளிட்ட பலவற்றை வழங்குகின்றது.தயாரிப்புகளை மிக இலகுவாக ஆய்வு செய்யவும், ஒன்லைன் மூலமாக ஓர்டர் செய்யவும் (பணம்/ அட்டை மூலம் செலுத்துதல்), மிக விரைவான விநியோக சேவையின் ஊடாகப் பொருட்களை வாங்கவும் ஏற்ற வசதியான ஒரு தளத்தை இந்த இணையதளம் வழங்குகின்றது. DIMO நம்பிக்கையான உத்தரவாதத்தை ஒவ்வொரு பொருட்களுடனும் வழங்குவதுடன், இணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவையையும் வழங்குகின்றது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மாதாந்த சலுகைகளையும், ஊக்குவிப்புகளையும், விலை குறைப்புக்களையும் உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் கட்டுப்படியாகும் முதற்தர இணைய கொள்வனவு அனுபவத்தை பெற்று மகிழ முடியும். கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விநியோக சேவைகளைத் தற்போது பெறக்கூடியதாக உள்ளதுடன், தனது விநியோகத்தை கூடிய விரைவில் நாடு பூராகவும் விஸ்தரிக்க நிறுவனமானது எதிர்பார்த்துள்ளது. சலுகைகளுடன் வழங்கப்படும் 2000க்கும் அதிகமான தயாரிப்புக்களுடன், மேலதிக பல தயாரிப்புக்கள் சீராக உள்ளடக்கப்பட்டு வருவதுடன், DIMO Retail  அனைத்தையும் உள்ளடக்கிய  உயர் பாவனையாளர் அனுபவத்திற்காக பன்முக தீர்வுகளை வழங்குகின்றது.

www.dimoretail.lk இணையதளத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், குழுமத்தின் உள்ளக பிரிவான DIMO Digital இனால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளமையாகும். மார்ச் முதல் ஜுன் வரையான கொவிட்-19 முடக்கல் காலப்பகுதியில் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுடன்  தொடர்பு கொள்வதற்காக, பல e-commerce தளங்களை DIMO Digital குழுவானது துரிதமாக உருவாக்கி, தமது தொழிநுட்ப தயாரிப்புகளின் வரிசையை விஸ்தரித்துள்ளது. மேலும் e-commerce தளங்களுக்கு  மேலதிகமாக, இலத்திரனியல் கற்கை, இணையதள உருவாக்கம், CRM & விற்பனை முகாமைத்துவம், IoT & GPS  கண்காணிப்பு போன்றவற்றிற்கு முழுமையான தயார் நிலையிலுள்ள தீர்வுகளை  DIMO Digital வழங்குகின்றது.டிஜிட்டல் முறையில் தமது செயற்பாடுகளையும், செயன்முறைகளையும் மாற்றம் செய்வதற்கு ஓர் குறிப்பிட்ட தளத்தை தேடிக்கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்காக, பிரத்தியேக தீர்வுகளை (இணையம், செயலிகளை அடிப்படையாகக் கொண்ட) உருவாக்கும் திறனையும் DIMO Digital கொண்டுள்ளது.

DIMO தொடர்பில்

DIMO பல தொடர்புபட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் பல பெறுமதியான வர்த்தக நாமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. Mercedes-Benz, Siemens, Jeep, KSB, TATA Motors, MTU, Komatsu, Michelin, Zeiss, MRF, Bomag, Claas, thyssenkrupp, Mahindra Tractors மற்றும் Stanley அவைகளில் சிலவாகும். வாகனங்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருந்த DIMO, இன்று பல துறைகளுக்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பொறியியல், கட்டிட முகாமைத்துவ அமைப்புகள் மற்றும் சேவைகள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், பொருள் கையாள்கை, சேமிப்பக மற்றும் களஞ்சியப்படுத்தல் தீர்வுகள், மின் கருவிகள், விவசாய உபகரணங்கள், மொத்த ஒளியூட்டல் தீர்வுகள், மின் அமைப்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள், குளிரூட்டல், கப்பல் பழுது மற்றும் ஓட்டுநர் பயிற்சி பாடநெறிகள் ஆகியன கடந்த சில தசாப்தங்களில் DIMO நுழைந்துள்ள துறைகளாகும். DIMO அண்மையில் உரம் மற்றும் விவசாய உள்ளீட்டு சந்தையிலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. மாலைத்தீவு மற்றும் மியான்மாரில் உள்ள வெளிநாட்டு சந்தைகளில் DIMO வெற்றிகரமாக நுழைந்தது. கடற்சார் மற்றும் பொது பொறியியல் சேவையை மாலைத்தீவில் உள்ள தமது பங்காண்மைகள் ஊடாக விரிவுபடுத்தியதன் மூலமும், ஒட்டோமொபைல் மற்றும் ஒட்டோமொபைல் சேவை வழங்கல் பிரிவுகளின் ஊடாக  மியன்மாரிலும் கால் பதித்தது.  DIMO தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் புதிய சந்தைகளுடன் தற்போதைய வெளிநாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க செயல்பட்டு வருகிறது.

Comment here