Uncategorised

முதல் ஐந்து ஆண்டு காலப் பகுதியை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ்

கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி (CLC) நிறுவனத்தின் அங்கமான CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய நிதி நிறுவனமாகத் திகழ்வதுடன் தற்போது தெற்காசிய இஸ்லாமிய நிதியீட்டு அரங்கிலும் உயர்வான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. CLC இன் இஸ்லாமிய வணிகப் பிரிவின் (IBD) கீழ் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) விதிமுறைகளுக்கு உட்பட்டு இஸ்லாமிய நிதி அலகாக 2015 இல் தொடங்கப்பட்ட CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் நிறுவனம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் இணையற்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஷரீஆ மேற்பார்வைக் குழு மற்றும் புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச அறிஞர்களைக் கொண்ட அர்ப்பணிப்பான உள்ளக ஷரீஆ ஆலோசகர்கள் மூலம் இணக்கத்துக்கு அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் CLC இஸ்லாமிக் ஃபினான்ஸின் அபரிதமான வளர்ச்சியானது பல சாதனைகளால் பிரதிபலிக்கப்படுகின்றது. குறிப்பாக, தெற்காசியாவில் அதன் நற்பெயரை மேன்மைப்படுத்திய தொடர் உயரிய விருதுகளின் வரிசை, மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு அமைய அவசியமான பங்கிலாப விகிதங்களை விட அதிகமான இணையற்ற ஆதாயத்தை வழங்கும் தயாரிப்புகள், வளர்ந்து வரும் சொத்துத் தளம், நாடு முழுவதும் சேவை வலையமைப்பின் ஊடான  புதுமையான தானியங்கி சேவை வழங்கல்கள் மற்றும் இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் அல்லாத அனைத்து குடிமக்களுக்கும் அதன் இலாபகரமான சேவைகளைப் பெற ஒரு திறந்த அழைப்பு.

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் வென்ற தொடர்ச்சியான உயரிய விருதுகள்

குறுகிய கால இடைவெளியில் அதன் வளர்ந்து வரும் நற்பெயர், இணக்க வலிமை மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் மீதான கவனம் ஆகியன இதற்கு சான்றாக அமைகின்றன. CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் Islamic Finance Forum of South Asia வில் (IFFSA- தெற்காசியாவில் இஸ்லாமிய வங்கியாளர்களுக்கான ஒரேயொரு வருடாந்த ஒன்றுகூடல்) தொடர்ச்சியாக விருதுகளை வென்றது. இந்த விருதுகளில் “Best Islamic Leasing Company in Sri Lanka and South Asia” விருதும் அடங்கும், இதனை  CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் 2016 முதல் வென்று வருகின்றது. CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ், 2016 ஆண்டின் Sri Lanka Islamic Banking and Finance Industry (SLIBFI) விருதுகளில் ““Emerging Islamic Finance Entity of the Year” விருதினையும் வென்றது. இதன் வெற்றிகளில் குறிப்பிடத்தக்க ஆண்டாக 2018 ஆம் ஆண்டு அமைந்ததுடன்,  இதன் போது IFFSA விருதுகளில் “Islamic Finance Entity of the Year”, “Best Islamic Leasing Company of the year” மற்றும் “Best Islamic Finance Window of the year” ஆகிய மூன்று தங்க விருதுகளையும் வென்றது.

இதில் முக்கியமானது என்னவெனில், CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் இந்தத் துறையில் அதிக இலாபப் பங்கை வழங்குகிறது. இது தொடர்பில் CLC இஸ்லாமிக் ஃபினான்ஸின் தலைவர், இல்ஸாம் அவ்பர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கான வைப்புத்தொகையின் மீது அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட இலாப பங்கு விகிதத்தை முதாரபாஹ் மற்றும் வகாலா முதலீடுகளின் மதிப்புமிக்க முதலீட்டாளர்களுக்கு வழங்குவதோடு, இது இத் துறையில் மிக உயர்ந்த தொகையாகும். இந்த வணிக அலகின் சொத்துத் தளம் தற்போது ரூ. 4 பில்லியன் என்பதுடன்,  பொறுப்புகள் ரூ. 2 பில்லியன் ஆகும். முதலீட்டாளர்களுக்கு இதுபோன்ற அதிக ஆதாயத்தை ஈட்டுவது எங்கள் இலாபகரமான மற்றும் பாதுகாப்பான வணிக மாதிரியின் காரணமாகும்.” இந்த பாதுகாப்பான வணிக மாதிரியின் ஒரு பகுதியாக, CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் பல புத்தாக்க தயாரிப்புகளை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில், CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் இந்தத் துறையின் முதல் முதாரபாஹ் வளர்ச்சி சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியது. இலாப பங்கீடு முதலீடுகள் என அழைக்கப்படும் முதாரபாஹ்  மற்றும் வகாலா முதலீட்டிற்கு மேலதிகமாக, இவ் வணிக அலகானது இஜாராஹ் குத்தகை, குறைந்து வரும் முஷாரகா  நிதி, முராபஹா  – வர்த்தக நிதி, வகாலா செயற்படு மூலதன நிதி மற்றும் முஸவ்வமாஹ் இறக்குமதி நிதி ஆகியவற்றை முன் பண அடிப்படையில் வழங்குகிறது.

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸின் குறிப்பிடத்தக்க வருடா வருட தயாரிப்புகளின் வளர்ச்சியானது இந்த விரிவான தயாரிப்புகளானது அறிவுபூர்வமான வாடிக்கையாளர் தளத்தின் கவனத்தை ஈர்த்துள்ளமையைக் காட்டுகின்றது.  இல்ஸாம் அவ்பர் மேலும் தெரிவிக்கையில்: “சி.எல்.சி.இன் 30 ஆண்டுகால தொழில் அனுபவத்திலும் எங்கள் பலம் உள்ளதுடன், இது எமது அனைத்து பரிவர்த்தனைகளிலும் ஷரீஆ இணக்கத்தை உறுதி செய்வதற்கான எங்கள் ஆர்வத்தால் உந்தப்பட்ட புதுமையான நிதி தீர்வுகளை நோக்கி நம்மைத் தூண்டியது.”

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் 65 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நாடு முழுவதும் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், 500 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களுக்கு இலவச அணுகலை வழங்குகின்றது. நடப்பு நிதியாண்டில் ஏனைய பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ள அதேவேளை அக்கரைபற்று, கின்னியா, மூதூர், ஓட்டமாவடி மற்றும் கட்டுவன்வில ஆகிய இடங்களில் பிரத்யேக இஸ்லாமிய நிதி சேவை மையங்களை நிறுவியுள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ், 2018 இல் “இஸ்லாமிய நிதிக் கையேடு” ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன் டிஜிட்டல் அணுகுமுறையுடன், நிதிப் பரிமாற்றங்கள், நிலையியல் கட்டளைகள், பொது பயன்பாடுகளுக்கான பில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான ஒன்லைன் வங்கி வசதிகளையும் இது வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரல் நுனியில் ஒன்லைன் வங்கிச் சேவைகளை அனுபவித்து மகிழ முடியும்.

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் (clc.lk/clc-islamic-finance) 2015 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், 5 ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் வாடிக்கையாளரை மையமாகக் கொண்டமையை பிரதான காரணியாகக் கொண்டு, மேலும் பல காரணிகளாலும் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதித் துறையில் ஆளுமைமிக்க சக்தியாக மாறியுள்ளது.

Comment here