தெற்காசியாவின் முன்னணி ஆதன தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru, தனது PropertyGuru Asia Property Awards நிகழ்வினை மெய்நிகர் கொண்டாட்ட மற்றும் விருது வழங்கும் நிகழ்வாக ஒளிபரப்பியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது PropertyGuru Asia Property Awards Grand Final இன் முதல் மெய்நிகர் நிகழ்வு என்பது மட்டுமன்றி, இந்த சிறப்பு ஒளிபரப்பானது கௌரவமானதும், நீண்டகாலமாக இயங்கி வருவதுமான ரியல் எஸ்டேட் விருது வழங்கும் நிகழ்சித் திட்டத்தின் 15 ஆவது தொகுப்பாகவும் அமைந்தது.
சீனப் பிரதேசங்கள் (மெயின்லேண்ட் சீனா, ஹொங்கொங், மக்காவ்), அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 14 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த டெவலப்பர்கள் மற்றும் திட்டங்களுக்கு மிகவும் விரும்பப்படும் விருதுகளை 15ஆவது PropertyGuru Asia Property Awards Grand Final வழங்கி கௌரவித்ததுடன், தமது சக நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ‘ஆசியாவில் சிறந்தவை’ என அவர்களின் நிலையை உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டு PropertyGuru Asia Property Awards தொடரில் அந்தந்த நாடுகளுக்கான மேன்மை வாய்ந்த வெற்றியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 87 நிறுவனங்கள் 35 விருதுகளுக்காகப் போட்டியிட்டதுடன், இம்முறை Best Mixed Use Developer (Asia); Best Industrial Developer (Asia); Best Lifestyle Developer (Asia); Best Sustainable Developer (Asia); Best Commercial Developer (Asia) மற்றும் Best Breakthrough Developer (Asia) போன்ற இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருக்காத பிராந்திய டெவலப்பர் விருதுகளும் வழங்கப்பட்டன.
PropertyGuru Asia Property Awards Grand Final இன் மைல்கல்லாக அமைந்த இந்த 15 ஆவது தொகுப்பில், மூன்று பிராந்திய டெவலப்பர் விருதுகளுடன் சிங்கப்பூரானது அதிக விருதுகளை வென்ற நாடாக பதிவானது. Best Developer (Asia) விருதினை வென்றதன் மூலம் இந்த நிகழ்வின் மிகப் பெரிய வெற்றியாளராக GuocoLand பதிவானதுடன், இந்த இரவில் அதிக விருதுகளை வென்ற நிறுவனமாகவும் பெயர் பெற்றது. இதனோடு, அதன் Guoco Midtown மற்றும் Wallich Residence திட்டங்கள் முறையே Best Mixed Use Development (Asia) மற்றும் Best Condo Development (Asia) ஆகிய பிராந்தியத்தின் உயர்ந்த விருதுகளை தம்வசப்படுத்தியிருந்தன. Aurum Land (Private) Limited நிறுவனம் Best Boutique Developer (Asia) ஆக பெயரிடப்பட்டதுடன், அதன் The Hyde திட்டம், Best High Rise Condo Architectural Design (Asia) விருதினையும் நிறுவனத்துக்கு பெற்றுத்தந்தது. Wing Tai Asia இந்தப் பிராந்தியத்தின் 7 திட்டங்களை பின் தள்ளி Best Lifestyle Developer (Asia) விருதினைப் பெற்றது.
தெற்காசியாவின் சிறந்த ஆதனங்கள் மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களை வேறுபடுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் PropertyGuru Asia Property Awards ஸ்தாபிக்கப்பட்டது. மெயின்லேண்ட் சீனா, ஹொங்கொங் மற்றும் மக்காவ்; அவுஸ்திரேலியா; தெற்காசியா (இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு); மற்றும் ஜப்பான் (Greater Niseko) ஆகிய நாடுகளில் உள்ள சிறந்த ஆதனங்கள் மற்றும் அபிவிருத்திகளை கௌரவிப்பதற்காக இந்த விருதுகள் நிகழ்ச்சித்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் விருது வழங்கலில் 15 ஆண்டு கால மேன்மையைக் கொண்டாடுகிறது.
PropertyGuru Group இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, ஹரி வி.கிரிஷ்ணன், கருத்து தெரிவிக்கையில், “PropertyGuru Asia Property Awards, மற்றவர்கள் இடையே, அடுத்ததை உருவாக்கி வெற்றியைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதுடன்: ஆசியா பசிபிக் முழுவதும் டெவலப்பர்களின் சாதனைகள் மற்றும் புத்தாக்கங்களை வெளிப்படுத்த பரவலாக மதிக்கப்படும், மிகவும் நம்பகமான தளத்தை வழங்கும் திட்டம் இதுவாகும். இந்த அசாதாரண காலங்களில் டெவலப்பர்களின் சாதனைகளை ஒளிபரப்புவதற்கான ஈடுபாட்டுடன், அதிவேகமாக, தொடர்புறும் வழிகளில் இந்த திட்டம் தொடர்ந்து இருப்பது மட்டுமல்லாமல், அதன் 15ஆவது ஆண்டில் தெற்காசியாவிற்கு வெளியே அற்புதமான புதிய சந்தைகளாக விரிவடைவதையும் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களை விட, ஆசிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு உயர்தர ரியல் எஸ்டேட்டின் அதிக தெரிவுகளை இந்த விருதுகள் தொடர்ந்து அறிவிப்பதில் பெருமையடைவதோடு, அனைவருக்கும் வீடு என அழைப்பதற்கு ஓர் இடம் இருக்க வேண்டும் என்ற எங்கள் வாக்குறுதியின் படி செயற்படுகின்றோம்,”என்றார்.
பங்கேற்கும் சந்தைகளின் தலைமை நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு சுயாதீன நடுவர் குழு இந்த ஆண்டு பிராந்திய மற்றும் நாடுகளுக்கான வெற்றியாளர்களை தெரிவு செய்வதற்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. அவை: Christophe Vicic, Country Head, Jones Lang LaSalle Philippines, Inc. (Philippines); Doddy A. Tjahjadi, Managing Director, PTI Architects (Indonesia); Lim Wenhui, Partner, SPARK Architects (Singapore); Lui Violanti, Regional Manager for Western Australia, Inhabit Group (Australia); Paul Tse, President, Board of Directors, Macao Association of Building Contractors and Developers (Hong Kong and Macau); Prem Kumar, Deputy Managing Director, Jones Lang Wootton (Malaysia); Richard Emerson, Managing Director, Emerson Real Estate (Myanmar); Sorn Seap, Founder and Director, Key Real Estate Co., Ltd (Cambodia); Sun Yigong, Chairman, Tospur Real Estate Consulting Co., Ltd. (Mainland China); Suphin Mechuchep, Managing Director, JLL Thailand (Thailand); மற்றும் Thien Duong, Managing Director, Transform Architecture (Vietnam).
15th Annual PropertyGuru Asia Property Awards Grand Final இற்கு பிளாட்டினம் அனுசரணையாளர் Kohler; உத்தியோகபூர்வ எயார்லைன் பங்காளர் Thai Airways ; உத்தியோகபூர்வ போர்டல் பங்காளர் PropertyGuru; உத்தியோகபூர்வ சஞ்சிகை PropertyGuru Property Report; உத்தியோகபூர்வ மக்கள் தொடர்பாடல் பங்காளர் Artemis Associates ; உத்தியோகபூர்வ தொண்டு பங்காளர் Right to Play ; உத்தியோகபூர்வ ESG பங்காளர் Baan Dek Foundation மற்றும் உத்தியோகபூர்வ மேற்பார்வையாளர் BDO ஆகியோரால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
Comment here