இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம்.
072 சந்தாதாரர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு Etisalat Sri Lanka நிறுவனத்தை Hutchகையகப்படுத்தி பின்னர் நாடு முழுவதும் 4G வலையமைப்பை ஸ்தாபித்தமையை தொடர்ந்து, புதிய Cliq app தற்போது 078 மற்றும் 072 இரண்டு சந்தாதாரர்களுக்கும் Cliq 4G ஐ வழங்கும் பொருட்டு Hutch இனால் வழி செய்யப்பட்டுள்ளது.
cliQஎன்பது மொபைல் அப்ளிகேஷனாகும். இதன் மூலம் பயனர்கள் கால அடிப்படையிலான இணைய பெக்கேஜ்களை வசதியாக கொள்வனவு செய்ய முடிவதுடன், அவர்களின் ஸ்மார்ட்போன்களில் எல்லையற்ற இணைய அனுபவத்தை பெற்று மகிழலாம்.
இது மெகாபைட் மற்றும் ஜிகாபைட் என்ற டேட்டா முறைகளை தவிர்த்து, கால அடிப்படையிலான தொகுதிகளாக இணைய அணுகலை வழங்குகின்றது. எனவே, பாவனையாளர்கள் மன அமைதியுடன், மீதமுள்ள டேட்டா மீதி தொடர்பில் எவ்வித கவலையுமின்றி இணைய பாவனையில் ஈடுபடமுடியும்.
இந்த அப்ளிகேஷன் Google Playstore , ioSஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு App Store இலும், Huawei பாவனையாளர்களுக்கு AppGalleryஇலும் கிடைக்கின்றது.
முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருசாராருக்குமான, 30 நிமிடங்கள் முதல் 30 நாட்கள் வரையான 3ஜி மற்றும் 4G cliQதிட்டங்களை உங்கள் விருப்பதுக்கு ஏற்ப கொள்வனவு செய்வதன் மூலம் தமது 3G அல்லது 4G சாதனங்கள் மூலம் வசதியாக, எல்லைகளின்றி இணையத்தில் உலாவர cliQவழி செய்கின்றது.
” cliQஐ புதிய 4Gக்கு செயற்படுத்தியதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக, மேலும் அணுகலுடன் மற்றும் வசதியான மொபைல் தரவு இணைப்பை வழங்கும் எங்கள் வாக்குறுதியை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது,” என பெறுமதி சேர் சேவைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் உதவிப் பொது முகாமையாளரான யாதவ் மதியாபரணம் குறிப்பிட்டார்.
Comment here