Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான quad AI கமெரா அமைப்பே, இதனை மொபைல் புகைப்படவியலில் ஒரு வலுநிலையமாக்கியுள்ளது.
இவ் உலகம் அழகால் நிரம்பியுள்ளதுடன், அதன் சிறந்த தருணங்களை படம்பிடிக்க விரும்புவோர் தற்போது Huawei நிறுவனத்தின் நவீன மத்தியதர புத்தாக்கமான Nova 7i இன் ஆடம்பரத்தைப் பெறுகின்றனர். இந்த quad AI கமெரா அமைப்பானது சதுரவடிவான மாதிரியில் காணப்படுவதுடன், இவ் அமைப்பின் கீழ் LED flash காணப்படுகின்றது. இது PDAF மற்றும் autofocus உடன் கூடிய 48MP முதன்மைக் கமெராவையும், அதனுடன் 8MP ultra-wide angle இரண்டாம் கமெரா, 2MP macro கமெரா மற்றும் ஆழமான விளைவைக் கொண்டுவரும் depth சென்சருடன் கூடிய மேலுமொரு 2MP கமெராவை உள்ளடக்கியுள்ளது. முதன்மை கமெராவால் பிடிக்கப்படும் படங்கள் குறைந்த வெளிச்ச நிலைகளில் கூட பிரகாசமானவையாகும். 8MP ultra-wide கமெரா மலைப்பூட்டும் விவரங்களுடன் கூடிய படங்களை எடுக்க உதவுகிறது.
இதன் திரையின் இடது பக்க மூலையில் ஒரு சிறிய துளையாக (Punch hole) உள்ளடக்கப்பட்டுள்ள முன்பக்க கமெராவானது 16MP என்பதுடன், குறைந்த வெளிச்சத்திலும் பிரம்மிக்க வைக்கும் செல்பிக்களை எடுக்க உகந்ததாகும். இந்த முன் கமெரா இயற்கை அழகு மற்றும் தனிப்பட்ட பண்புகளை வெளிப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த AI தொழில்நுட்பம் படம்பிடிக்கும் பொருட்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப செட்டிங்களை சரிசெய்து, ஒவ்வொரு படத்தையும் விரும்பத்தக்கதாக மாற்றுகின்றது. இந்த கமெரா அப்ளிகேஷனானது உங்களுக்குள் உள்ள அபாரமான புகைப்படக்கலைஞரை வெளிக்கொண்டு வர Photo, Video, Pro, Night, Portrait, Panorama, HDR, Slow motion, Moving picture, Super macro மற்றும் Time lapse போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
“Nova 7i, அதி சக்தி வாய்ந்த கமெராவுடன் கூடிய, விலைக்கு மேல் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள மிகக் குறைவான எண்ணிக்கையிலான மத்தியதர ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். முழுமையான புகைப்பட அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் இது உள்ளடக்குவதுடன், செயல்திறன் மற்றும் பிற முக்கிய அம்சங்களுக்கும் இது விதிவிலக்கல்ல. Nova 7i புகைப்படவியலுக்கான தலைசிறந்த தயாரிப்பென்பதுடன், இதன் கட்டுப்படியாகும் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும் போது, Huawei விரும்பிகளிடையே நல்ல வரவேற்பைப் பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது”, என Huawei Devices, Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு தெரிவித்தார்.
மிரளவைக்கும் கமெரா அமைப்புக்கு மேலதிகமாக Nova 7i, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் 40W Huawei சுப்பர்சார்ஜ் என முதற்தர அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. 4200mAh பற்றரியானது நீடித்து நிலைப்பதுடன், 40W super charge அம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 70 வீதம் சார்ஜ் செய்ய முடியும். இந்த 6.4 அங்குல ஸ்மார்ட்போன் EMUI 10 உடன் கூடிய அண்ட்ரோய்ட் 10 இல் இயங்குவதுடன், 8GB RAM மற்றும் 12GB உள்ளக மெமரியுடன், Kirin 810 இனால் வலுவூட்டப்படுகின்றது. மேலும் Nova 7i , வேகமான மற்றும் பாதுகாப்பான மொபைல் அனுபவத்தைத் தரும் Huawei Mobile சேவைகள் மற்றும் பல வகையான அப்ளிகேஷனைக் கொண்ட Huawei AppGallery, ஆகியவற்றுக்கான அணுகலைக் கொண்டுள்ளது.
Sakura Pink, Crush Green மற்றும் Midnight black ஆகிய மூன்று நிறங்களில், அனைத்து Huawei அனுபவ வர்த்தக நிலையங்கள், Singer காட்சியறைகள் மற்றும் Daraz.lk இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைக்கின்றது.
Comment here