வீடியோ கண்காணிப்பு தீர்வுகளின் முன்னணி விநியோகத்தரும், இலங்கையில் Hikvision விநியோகத்தருமான, IT Gallery Computers பிரைவட் லிமிடெட் நிறுவனம், ஒரு முழுமையான Hikvision அனுபவ மையத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் பயணத்தை புதிய பாதையை நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
தெற்காசியாவின் முதலாவது Hikvision அனுபவ மையமாகவும், ஜா-எல நகரில் எளிதில் அடையக்கூடிய விசாலமான இக்காட்சியறையானது, வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, IT Gallery இற்கு உரித்தான, மிக நீண்ட கால அம்சங்களான தயாரிப்புகளை தேடுதல், பரிந்துரைத்தல், அனுபவத்தைப் பெறும் வாய்ப்புக்கான உயர் வர்த்தக மற்றும் நுகர்வோர் தயாரிப்புகள், நிபுணர் ஆலோசனைகள், Hikvision தயாரிப்புகள் உள்ளிட்டவற்றையும், தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவமிக்க குழுவையும் கொண்டுள்ளன.
இப்புதிய அனுபவ மையமானது, ஸ்மார்ட் சிட்டி தீர்வுகள், கட்டட தீர்வுகள், சில்லறை தீர்வுகள், வங்கி தீர்வுகள், ஸ்மார்ட் இல்லங்களுக்கான தீர்வுகள், சேமிப்பக தீர்வுகள், மொபைல் தீர்வுகள், உள்வரும் வாடிக்கையாளர்களுக்கு AI தீர்வுகள் உள்ளிட்டவற்றை வழங்குவதோடு, இதன்போது வழமையான விடயங்களுடனான எல்லைகளை தகர்க்கும் வகையிலான தனித்துவமானதும் சமகால அனுபவத்துடனும் வாடிக்கையாளர்கள் நடத்தப்படுவார்கள்.
இவ்வறிமுக விழாவின் போது கருத்துத் தெரிவித்த, IT Gallery Computers பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த பெரேரா, “நீடித்த தாக்கத்தை வழங்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வை வழங்கும் பொருட்டும், தெற்காசியாவில் முதலாவது Hikvision அனுபவ மையத்தைத் திறப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இப்புதிய காட்சியறையானது, வாடிக்கையாளர் அனுபவத்தை மீள்வரையறை செய்வதோடு, Hikvision குழுவுடன் தொடர்புறுவதற்கும், அவை தொடர்பான பூரண அறிவு மற்றும் வழிகாட்டல்களைப் பெறுவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. நேரடியான மல்டிமீடியா அனுபவத்தை பெறுவதனை உறுதிப்படுத்தும் இப்புதிய காட்சியறையில், அனைத்து Hikvision தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதோடு, நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மொத்த அம்சங்களையும் இது கொண்டிருக்கும்.” என்றார்.
வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவுகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குவதற்கான அதன் முயற்சிகளுக்காக, இப்புதிய காட்சியறையில் நன்கு பயிற்சி பெற்ற, அனுபவமிக்க குழுவை IT Gallery நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது. Hikvision அனுபவ மையத்தில், Hikvision தயாரிப்புகள் தொடர்பான பயிற்சி அமர்வுகளை நடத்துவதற்கான ஒரு பிரத்தியேக தளம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அது இளைய தலைமுறையினருக்கு சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையில் புதிய அம்சங்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
IT Gallery நிறுவனத்தின் Corporate Business தலைமை அதிகாரியான, நுவன் பெரேராவை, [email protected] or 077 3149957 ஊடாக முற்பதிவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் இவ்வனுபவ மையத்தைப் பார்வையிட முடியும்.
இலங்கையில், ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உலகளவிய ரீதியில் புகழ்பெற்ற தரக்குறியீடுகளில் ஒருவரும், முன்னணி பெறுமதிசேர் சேவைகள் வழங்குனர்களில் ஒருவருமான IT Gallery ஆனது, Hikvision தீர்வுகளை வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். EAST UPS மற்றும் மின் விநியோக தயாரிப்புகள், Pantum printer தயாரிப்புகள், Lenovo வர்த்தக தயாரிப்புகள், A4 Tech கணனிப் பாகங்கள், G&G printer பாகங்கள் மற்றும் OCEAN மல்டிமீடியா தயாரிப்புகளுக்கான விநியோகஸ்தர் உரிமைகளையும் IT Gallery கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comment here