Uncategorised

நீர் இறைத்தல் தீர்வுகளின் முன்னோடியான AGROMAX நுகர்வோர் நீர் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய Abans உடன் கைகோர்ப்பு

நீர் இறைக்கும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Agromax, சிறந்த தரமான நீர்ப்பம்புகளை கட்டுப்படியாகும் விலையில் வழங்கி, அனைத்து இலங்கையர்களின் நீர் தேவைகளையும் தீர்க்கும் பொருட்டு, முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Abans  உடன் கைகோர்த்துள்ளது. இந்த சிறப்புமிக்க பங்குடமையானது Agromax இற்கு, தேசத்தின் அனைத்து வகையான நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு உலகத் தரமான நீர்ப்பம்பு வரிசைகளை விநியோகிப்பதற்கு Abans காட்சியறை வலையமைப்பினை பயன்படுத்திக்கொள்ள உதவும்.

Agromax அனைத்து தரப்பு மக்களும் தூய்மையான தண்ணீரைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், வீட்டு உபயோக பம்புகள், உழவர் சமூகத்திற்கான விவசாய பம்புகள் மற்றும் உள்நாட்டு நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யவும், சவாலான நிலமைகளின் கீழ் செயற்படக்கூடிய தொழில்துறை பம்புகள் வரையிலான அதன் இறுதி நீர் தீர்வுகள் மூலம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை ஏற்கனவே வலுவூட்டியுள்ளதுடன்,  நாடு முழுவதும் அதன் பரந்த விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் சேவைகளுடன் இயங்கி வருகின்றது.

Agromax நீர் இறைக்கும் தீர்வுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், மின்சார ஏற்ற இறக்கம், காலநிலை மாறுபாடுகள் மற்றும் மண்ணின் அமைப்பு போன்ற நிலைமைகளின் கீழ் செயல்படும் வகையில் நீர்ப்பம்புகளை பொறியியல் மற்றும் மறுபொறியியல் மேற்கொள்வதில் நன்கு பெயர் பெற்றதுடன், இதன் மூலம் ஒவ்வொரு இலங்கையரது வீட்டு வாசலுக்கும் மிகவும் பொருத்தமான தேவைக்கேற்ற தீர்வுகளை வழங்குகிறது. Agromax பம்புகள் குறைந்த சக்தி உள்ளீர்ப்பு மற்றும் ஆற்றல் திறன் மிக்கதாவும், சீரான செயற்பாட்டுக்காக 100% செப்பு நிலையகங்களுடனும் உற்பத்தி செய்யப்படுகின்றன. Agromax  நீர்ப்பம்பு உற்பத்தி வரிசையானது உள்நாட்டு, தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பம்புகளை உள்ளடக்கியது. அனைத்து Agromax தயாரிப்புகளும்  நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதுடன், அவை நீடித்த பாவனைக்குகந்தவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் Agromax அண்மையில் குடிநீர், மருத்துவமனைகள் மற்றும் உணவு உற்பத்தித் துறை பயன்பாட்டிற்காக முழுவதும் துருப்பிடிக்காத உருக்கினால் ஆன முதல் தர நீர் பம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு இலங்கையருக்கும் சுத்தமான நீரை வழங்கும் தமது முயற்சிகள் குறித்து Agromax  இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, சதாத் மொஹமட் கருத்து தெரிவிக்கையில்; “சுத்தமான நீருக்கான அணுகல் உலகளாவிய தேவையாகும். இலங்கையர்களான நாமும் அதற்கான அணுகல் இல்லாததன் விளைவுகளை எதிர்கொள்கிறோம், குறிப்பாக கொழும்புக்கு வெளியே வாழும் மக்களுக்கு. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சுத்தமான நீருக்கான அணுகலை வழங்கி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் வலுவூட்டும் மற்றும் இவை அனைத்துக்கும் மேலாக விவசாயிகளுக்கு அதிகபட்ச அறுவடை விளைவிப்பதற்காக விவசாய பண்ணை நிலங்களுக்கு போதுமான தண்ணீரை வழங்குவதிலும் எமது பங்கை வகிக்கின்றோம். கட்டுப்படியாகும் நீர்ப்பம்புகளை வழங்குவது தொடக்கம் முதலே எங்கள் கவனமாக இருந்து வருவதுடன், எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எரிபொருள் வினைத்திறன் மிக்க, செலவு குறைந்த மற்றும் பயன்படுத்துவதற்கு இலகுவானவை என்பதனை நாங்கள் உறுதிசெய்கிறோம்”, என்றார்.

Agromax நீர்ப்பம்புகளின் வாடிக்கையாளர்களும் அதன் நன்கறியப்பட்ட, உயர் தரமான விற்பனைக்குப் பின்னரான சேவையினால் நன்மையடைவார்கள். அதன் தொழில்நுட்ப ஊழியர்கள் நாடு முழுவதும் உள்ளதுடன், அவர்கள் வீட்டு வாசலுக்கான பழுதுபார்ப்பு சேவைக்கான அழைப்புகளுக்கு பதிலளிப்பதுடன், நீர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான சரியான தீர்வை வழங்குவார்கள். ஒரே அழைப்பில் தொழில்நுட்ப ஊழியர்கள் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வர்.

நீர் நுகர்வோர் நாடு முழுவதிலும் உள்ள Abans காட்சியறைகளில் இருந்து நம்பிக்கைக்குரிய உத்தரவாதத்துடன்  Agromax  நீர்ப்பம்புகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதால் Agromax–Abans இடையிலான பங்குடமை மிகவும் வெற்றிகரமானதொன்றாகும். மேலும் அவர்கள் Agromax இனை பயன்படுத்தும் போது Abans இன் இலகுகொடுப்பனவு திட்டம், கிரடிட்/டெபிட் அட்டை கொடுப்பனவு மற்றும் நாடுபூராகவுமான விநியோக சேவை என்பனவற்றை பெற்றுக்கொள்ள முடியும். Agromax நீர்ப்பம்புகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் என்பதுடன், நீர் முகாமைத்துவத்தில் 20 வருட அனுபவமும், காலநிலை மாற்றம் மற்றும் மண்ணின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு நீர் பம்புகளில் பொறியியல் மற்றும் மறுபொறியியலை மேற்கொள்ளும்,  நுகர்வோரை மையமாகக்கொண்ட வர்த்தநாமமாகும். அனைத்து Agromax தயாரிப்புகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு மிக உயர்ந்த, உலகளாவிய தர நியமங்களின்

Comment here