Uncategorised

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் Huawei இன் வருமானம் 9.9% வளர்ச்சி

Huawei, 2020 இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தனது வியாபார பெறுபேறுகளை இன்று அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்,  வருமானமாக CNY671.3 பில்லியனை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரிப்பாகும். மேலும், இக் காலப்பகுதியில் நிறுவனத்தின் நிகர இலாப எல்லை 8.0% ஆக இருந்தது. 2020 இன் முதல் முன்று காலாண்டுப் பகுதியில் Huawei இன் வியாபார பெறுபேறுகள் பொதுவாக எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது.

உலகம் கொவிட் 19 உடன் போராடி வரும் நிலையில்,  இன் உலகளாவிய விநியோக சங்கிலியானது கடும் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன. தீர்வுகளை கண்டறிவதற்கும், நீடித்திருப்பதற்கும், முன்னோக்கிச் செல்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கு அதன் கடமைகளை நிறைவேற்றவும் நிறுவனம் தொடர்ந்து தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்கின்றது.

முன்னோக்கி நகர்கையில், Huawei ICT தொழில்நுட்பங்களான AI, கிளவுட், 5G மற்றும் கனணியியல் போன்றவற்றில் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை வழங்கவும், தொழில்துறை அப்ளிகேஷன்களை உருவாக்கவும் தனது பலத்தை உபயோகிக்கவுள்ளதுடன் , தனது பங்காளர்களுடன் இணைந்து 5G வலையமைப்புகளின் பெறுமதியை வெளிப்படுத்தும். நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை வளர்க்க உதவுவதும், உள்நாட்டு தொழில்துறையை உயர்த்துவதற்கும், தொகுதிகளுக்கு நன்மை செய்வதற்கும், ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கங்களுக்கு உதவுவதே இதன் குறிப்பிடப்படும் குறிக்கோளாகும்.

ICT நவீன சமுதாயத்தின் ஒரு அடிப்படையாகவும், நிலையான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள முக்கிய உந்துகோலாகவும் மாறியுள்ளது.ICT துறையில் விரைவான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி உலகளாவிய தொழில்துறை முழுவதும் திறந்த ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை நம்பியிருக்கும் என்று ஹவாய் நம்புகிறது, எனவே இது அதன் உலகளாவிய கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதோடு தற்போது முகங்கொடுக்கும் சிக்கலான சூழ்நிலையையும் மீறி வாடிக்கையாளர்களுக்கு அதிக பெறுமதியை உருவாக்க அதன் புதுமையான ICT தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.தொற்றுநோய்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு நிறுவனம் தொடர்ந்து பங்களிக்கும்.

[1] இங்கு வெளிப்படுத்தப்பட்ட நிதித் தரவு சர்வதேச நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க தொகுக்கப்பட்ட தணிக்கை செய்யப்படாதவையாகும்;  2020 செப்டம்பர் இன் இறுதியில் பரிமாற்ற வீதம்: US $ 1 = CNY6.8101 (source: an external agency)

Comment here