Uncategorised

விற்பனை அணியின் செயற்திறனை அதிகரிக்க கைகோர்க்கும் Singer, SLIM

உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer (Sri Lanka) ,  சந்தைப்படுத்துனர்களுக்கான உச்ச அமைப்பான Sri Lanka Institute of Marketing (SLIM), உடன் இணைந்து சிங்கரின் விற்பனை அணியை சிறந்த நடைமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைசார் அறிவில் மேம்படுத்தும் பொருட்டு சில்லறை சேவைகள் சந்தைப்படுத்தல் உயர் சான்றிதழை (Advanced  Certificate  in Retail Services Marketing) அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஒத்துழைப்பானது நன்கு பயிற்றப்பட்ட ஊழியர்களின் உதவியுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்தும் Singer இன் நோக்கத்து பங்களிப்பு செய்யும். வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனமாக Singer எப்போதும் தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் ஆர்வமாக உள்ளதுடன், இது அதன் முயற்சிகளுக்கு மேலும் உதவுகிறது.

சில்லறை சேவைகள் சந்தைப்படுத்தலில்  உயர் சான்றிதழானது அதன் விற்பனை ஊழியர்களுக்கு எதிர்கால தலைவர்களாக மாறுவதற்கான அனைத்து முக்கிய வாய்ப்புகளையும் வழங்கும் அதேவேளை, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு அவர்களின் சந்தைப்படுத்தல்  திறனையும் மேம்படுத்துகிறது.

ஊழியர்களின் நம்பிக்கையையும் திருப்தியையும் உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்ட அதன் முயற்சிகளுக்காக Singer தொடர்ச்சியாக “வேலை செய்வதற்கான சிறந்த இடம்” என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது இறுதியில் உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் மேம்பட்ட சேவை வழங்கல்களுக்கு வழி வகுத்தது. அதன் அணியை கட்டமைப்பதில் Singer இன் முயற்சிகள், இலங்கையின் சில்லறை வர்த்தக பிரிவில் அந் நிறுவனத்தை முன்னணியில் வைத்திருப்பதுடன், ஒவ்வொரு வருடமும் உறுதியான விற்பனை வளர்ச்சியை  அது பதிவு செய்கின்றது.

“Singer நாடு முழுவதும் பிரசன்னத்தைக் கொண்ட மற்றும் வலுவான விற்பனை வலையமைப்பைக் கொண்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் அதன் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கு புகழ்பெற்றதுடன், அது இந் நிறுவனத்தை அதிக உயரத்திற்கு முன்னேற்றியுள்ளது. இந்த முயற்சியானது வாடிக்கையாளர் சேவையில் சிறந்த நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கும், இலங்கையில் எங்கள் வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்தும் எங்களது முயற்சிகளுக்கு மேலும் உதவும், என Singer (Sri Lanka) PLC இன் பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன தெரிவித்தார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  உயர் சான்றிதழ்  தவிர, Singer நிறுவனம் Singer Retail Academy ஐ  நிறுவியுள்ளதுடன், இது மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கற்கை நிலையமானது வாடிக்கையாளர் உதவி மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் சான்றிதழ் கற்கைநெறிகளை வழங்குவதுடன், இவை Singer இல் ஒரு சிறந்த தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கான அடித்தளமாக அமைகின்றது. அதை வெற்றிகரமாக முடித்த விற்பனையாளர்கள் சில்லறை சேவைகள் சந்தைப்படுத்தல் உயர் சான்றிதழுக்கு வழிகாட்டப்படுகின்றார்கள். பங்கேற்பாளர்கள் அடிப்படைகளிலிருந்து மேம்பட்ட சந்தைப்படுத்தல் எண்ணக்கருக்கள் வரை கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த கற்கையானது நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த, Singer (Sri Lanka) PLC இன் மனித வளங்கள் மற்றும் வணிக ஒருங்கிணைப்புக்கான பணிப்பாளர், ரொஷான் குலசூரிய; “எங்கள் நிறுவனத்தில் தலைமைப் பதவிகளை ஏற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ள 3000 க்கும் மேற்பட்ட விற்பனை ஊழியர்களை Singer  கொண்டுள்ளது. SLIM ஊடாக வழங்கப்படும் உயர் சான்றிதழ்  மூலம் அங்கீகாரத்தை வழங்கி அவர்களை விற்பனை நிபுணர்களாக உருவாக்குவது மிகவும் முக்கியத்துவம் மிக்கதென்பதுடன், நாம் மேற்கொள்ளும் முக்கிய முதலீடு இதுவாகும். ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் அவர்களின் எதிர்கால வாய்ப்புகள் என்பன எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கக்கூடியஒரு சிறந்த சூழலை மீண்டும் உறுதிசெய்துள்ளது,” என்றார்.

Singer (Sri Lanka) PLC நுகர்வோர் சாதன சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடு முழுவதும் வளர்ந்து வரும் தனது நுகர்வோருக்கு பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் புகழ்பெற்றது. இது 430 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், சிங்கர் 600 க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ளது. SLIM-Nielsen மக்கள் தெரிவு விருதுகளில் தொடர்ந்து 14 ஆவது ஆண்டுகளாக Singer, இலங்கை ‘மக்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த வர்த்தகநாமம்’ ஆக (People’s Brand of the Year) தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Comment here