Uncategorised

முழுக் குடும்பத்தினருக்கும் “footprints” DIY தொகுதிகளுடன் வீட்டு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்கும் DIMO

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, அதன் புத்தம் புதிய முயற்சியான ‘footprints’ என்ற தாமாகவே செய்து கொள்ளக்கூடிய (Do-It-Yourself – DIY) வீட்டு தோட்டக்கலை தொகுதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொறுப்பான கூட்டாண்மை நிறுவனமாக அதன் மதிப்புக்குரிய சான்றுகளை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

DIMO தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர், ரஞ்சித் பண்டிதகே, அதிதிகள் மற்றும் சமூக ஊடக ஆக்கங்களுக்கான படைப்பாளர்கள் குழுவினரின் ஆதரவோடு footprints இன் மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. பல்வேறு துறைகளில் அதன் இணையற்ற நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கைக்கு வலுவான நற்பெயரைக் கொண்டுள்ள DIMO, அடுத்த தலைமுறை விவசாயத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் விவசாய வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

footprints இன் நோக்கம் வீட்டுத் தோட்டக்கலையை ஒரு குடும்ப பிணைப்பு செயற்பாடாக ஊக்குவிப்பதாகும், இது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுவதுடன், ஓய்வுக்கான ஒரு வழியாக இருப்பதுடன், அன்பானவர்களுடன் மகிழ்ச்சியான மற்றும் குதூகலமான நினைவுகளையும் தருணங்களையும் வழங்குகிறது. இதை எளிதாக்குவதற்காக, அனைத்தும் அடங்கிய DIY வீட்டு தோட்டக்கலை தொகுதிகளின் புதிய எண்ணக்கருவின் மூலம் வீட்டுத் தோட்டத்தை மிகவும் வசதியான செயல்முறையாக மாற்றியமைத்துள்ளது. இது விதையிடும் நிலையிலிருந்து ஒரு செடி வளரத் தொடங்கி, காய்ப்பது வரையில் தேவையான அனைத்து வளங்களையும் கொண்டுள்ளது.

இதன் போது உரையாற்றிய DIMO தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்,  ரஞ்சித் பண்டிதகே இயற்கையுடனான ஆரோக்கியமான உறவைப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். அவர் குறிப்பிடுகையில்,” “இப்போது, ​​முன்னெப்போதையும் விட குடும்பங்கள் தங்களுக்குள்ளும் இயற்கையுடனும் பிணைப்பைத் தொடங்கவும், வலுவான உறவுகளை உருவாக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. இயற்கையுடன் நெருக்கமான அனுபவங்களை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் இந்த பிணைப்புகளை வளர்ப்பதற்கும் குடும்பத்திற்குள் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என்று DIMO நம்புகிறது. மொத்தத்தில், footprints இந்த இரண்டு அம்சங்களையும் எளிதாக்க உதவுவதுடன் குறிப்பாக குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது. பண்டைய காலங்களிலிருந்தே இலங்கையர்கள் விவசாயத்துடன் மிகவும் வலுவான பிணைப்பைக் கொண்டிருந்ததுடன், அது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்த பாரம்பரிய பிணைப்பை நகர்ப்புற குடும்பங்களிடையே தக்கவைத்து மீண்டும் உருவாக்கும் ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வைக்கு மாற்றுவதற்கான வாய்ப்பை footprints கொண்டு வருகிறது. இதன் மூலம் அதை நமது அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாக்க முடியும்,” என்றார்.

DIMO பணிப்பாளரும் / பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியுமான அசங்க ரணசிங்க கருத்து தெரிவிக்கையில்,”footprints வீட்டு தோட்டக்கலையை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரு கேளிக்கையான மற்றும் சுவாரஸ்யமான செயலாக ஆக்கியுள்ளன. இன்றைய வேகமான உலகில் எல்லாமே ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கு அதே நேரத்தில், இயற்கை எப்போதும் அதன் நேரத்தை எடுத்துக்கொள்ளும். கால எண்ணக்கருவை புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும் நமது இளமையான நாட்களிலிருந்து நம் வாழ்வில் உள்வாங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். DIMO இப்போது இயற்கையுடன் மீண்டும் இணைவதை எளிதாக்கியுள்ளது, மேலும் இந்த மறக்கமுடியாத அனுபவங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சாதகமான தாக்கத்தை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

இந்த வீட்டு தோட்டக்கலை தொகுதியானது  “Nursery Care Kit” மற்றும் “Complete Care Kit” ஆகிய இரண்டு வகைகளில் வருகின்றது. Nursery Care Kit ஒரு வசதியான வீட்டு தோட்டக்கலை காம்போ பொதியாகும். இதில் விதைகள், தும்பு பானைகள், கரி துகள்கள் மற்றும் தாவர குறிப்பான்கள் உள்ளன. உங்கள் சொந்த காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்க ஆரம்ப தொகுதியாக இதைப் பயன்படுத்தலாம். இது அதன் நாற்றுமேடை கட்டத்தில் தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாற்றுமேடை நிலை முடிந்ததும், நாற்றினை ஒரு பானை, மண் அல்லது வளர்ந்து வரும் வேறு எந்த ஊடகத்திற்கும் மாற்ற முடியும். Nursery Care kit ஐந்து வெவ்வேறு வகைகளில் வருவதுடன், ஒவ்வொன்றிலும் மூன்று பயிர்கள் அடங்கும் (மிளகாய், தக்காளி, கத்திரிக்காய், சாலட் வெள்ளரி, குடமிளகாய், கீரை, பெல் பெப்பர், பூசணி, கெக்கிரி, வெள்ளரி, பாகற்காய், புடலங்காய் மற்றும் சுரைக்காய் ). கொல்லைப்புறம், வீட்டுத் தோட்டம் அல்லது தாவரப் பானைகளுக்கு அணுகல் உள்ளவர்களுக்கு Nursery Care kit பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் Complete Care Kit ஒரு விரிவான அனைத்தும் அடங்கிய வசதியான வீட்டு தோட்டக்கலை காம்போ பொதியாகும். இது தாவரத்தின் நாற்றுமேடை கட்டத்தை எளிதாக்குவதற்கு விதைகள், தும்பு பானைகள், கரி துகள்கள் மற்றும் தாவர குறிப்பான்கள் மற்றும் மேலதிகமாக, ஒரு வளரும் பை (வளரும் ஊடகம்), ஒரு பூச்சட்டி கலவை (மண் கலவை) மற்றும் நாற்றுமேடை கட்டத்துக்கு பிந்தைய நிலைக்கு இடமளிக்கும் சிறிய உர பக்கெற்றுக்கள் ஆகியவை அடங்கும். இது ஒரு முழுமையான தொகுதி ஆகும், இது விதைப்பதில் இருந்து பழம் பெறும் வரையான முழுமையான வாழ்க்கைச் சுழற்சி மூலம் தாவரத்திற்கு உதவுகிறது. நாற்றுமேடை நிலை முடிந்ததும், நாற்றினை தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள வளரும் பையில் மாற்றி அறுவடை நேரம் வரை வளர அனுமதிக்க முடியும். இந்த Complete Care Kit நான்கு வெவ்வேறு வகைகளில் (தக்காளி, மிளகாய், கேப்சிகம் மற்றும் கத்திரிக்காய்) வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், வீட்டில் மிகவும் குறைந்த வெளிப்புற இடவசதி கொண்டோருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

பயணத்தின் ஒவ்வொரு அடியையும் மிகவும் அர்த்தமுள்ளதாக புரிந்துகொள்ள பாவனையாளர்களுக்கு உதவும் வகையில் “எப்படி செய்வது” என்ற தொடர் வீடியோக்களும் DIMO சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரு வகையான தொகுதிகளும் முன்னனி சுப்பர் மார்க்கெட்டுக்கள், இலத்திரனியல் வர்த்தக நிலையங்கள் மற்றும்  www.dimoretail.lk இல் கிடைக்கின்றன.

பட விளக்கங்கள்

Comment here