முன்னொருபோதும் இல்லாத வகையில் வீட்டிலிருந்து வேலை (Work From Home (WFH) and Learn From Home (LFH) ) மற்றும் வீட்டிலிருந்து கல்வி (LFH) என்ற நிலைகளுடன், தொழில்நுட்ப தீர்வுகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை, கல்வி, பொழுதுபோக்கு, ஓய்வு என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பம் ஊடுருவியுள்ளதை மறுக்க முடியாது.
மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற பல சாதனங்களுடன் பலர் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது, சிறந்த பயனர் அனுபவத்திற்காக ஒவ்வொரு சாதனத்துடனும் உயர் மட்ட ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. உலகளாவிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான Huawei அதன் 1+8+n எனும் மூலோபாயத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது அனைத்து Huawei சாதனங்களையும் ஒரே சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைக்கிறது. இது ஸ்மார்ட்போனை முக்கிய சாதனமாக மாற்றுகிறது. இந்த முன்னோடி இணைப்பு தீர்வு Huawei ஆனது வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மற்றும் பயனர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட் சாதனங்களை வைத்திருப்பது நிச்சயமாக அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ உற்பத்தித்திறனை அதிகரிக்கும். ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி அல்லது டேப்லெட்டின் கலவையானது மடிக்கணினி அல்லது டேப்லெட் வழியாக ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளை எளிதில் செய்ய பயனருக்கு உதவுகின்றது.
எடுத்துக்காட்டாக, ஒரு பயனர் அலுவலக வேலைகளில் மூழ்கியிருக்கும்போது மடிக்கணினியில் உள்ள செய்திகளுக்கு பதிலளிக்க முடியும். இந்த இணைப்பானது அலுவலக வேலைகளுக்கு அப்பால் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைகின்றது. ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் இசை அமைப்புகள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் ஒரே நேரத்தில் பயனரை மகிழ்விக்கின்றன மற்றும் அன்றாட பணிகளை இடையூறு இல்லாமல் செய்ய முடியும் என்பதையும் உறுதி செய்கிறது.
Huawei Nova 7i தடையற்ற இணைப்பு திறன்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படுகிறது. அதன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு அதனுடன் தொடர்புடைய உயர் வலிமை அம்சங்களால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. Nova 7i இன் முக்கிய அம்சம் அதன் 7i AI Quad கேமராவாகும். இது பயனரை இரவிலும் பகலிலும் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுக்கும் வசதியைக் கொடுக்கின்றது.
Nova 7i இன் 48MP பிரதான கேமரா, 8MP Ultra-wide கேமரா, 2MP 2MP Macro கேமரா மற்றும் 2MP Depth கேமரா இணைந்து தொழில்முறை தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. கேமரா பயன்பாட்டில் Photo, Video, Pro, Night, Portrait, Panaroma, HDR, slow motion, Super Macro and Time Lapse போன்ற பல தனித்துவமான மற்றும் மேம்பட்ட முறைகள் உள்ளன. இது உயர் செயல்திறன் கொண்ட 16MP செல்பி கேமராவையும் கொண்டுள்ளது, இது திரையின் மேல் இடது மூலையில் உள்ள ஒரு துளை வழியாக பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.
Huawei Nova 7i ஆனது 8GB RAM மற்றும் Kirin 810 மிகவும் மேம்பட்ட சிப்செட் ஆகும். இதன் 128 GB களஞ்சியப்பத்தும் திறனானது பயனர் விரும்பும் அளவுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள், பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு ஆப்களை சேமித்து வைக்க முடியும். பெரிய A 4200mAh பேட்டரியானது நீண்ட கால செயல்திறனை உறுதி செய்கிறது. அத்தோடு 40W Huawei சுப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 30 நிமிடங்களில் இதன் பேட்டரியை 70% வரையில் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
Nova 7i ஆனது பல Huawei சாதனங்களுடன் இணைக்க முடியும் என்றாலும், Huawei Watch GT2 Pro ஸ்மார்ட்போனுடன் இணைக்கும்போது அதன் புதுமையான அம்சங்கள் மற்றும் செயல்திறனோடு காணப்படுகின்றது.
1.3 inches கொண்ட Smartwatch இன்று வெளிப்புறம் டைட்டானியம் உடல் மற்றும் sapphire crystal வொட்ச் டயல்களால் ஆன இந்த இலகுரக Smartwatch அம்சங்கள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் இன்னும் சுவாரஷ்யத்தை அதிகரிக்கின்றது. 100 இற்கும் மேற்பட்ட தனிப்பட்ட workouts, 10 இற்கும் மேற்பட்ட running courses மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு பல பயனுள்ள metrics ஆகியவற்றைக் கொண்டு, Huawei Watch GT2 Pro மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சரியான துணையாக அமைகின்றது.
இது ஒரு சிறப்பு golf mode இனைக் கொண்டுள்ளது, இது காற்றின் வேகத்தை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் காற்றின் வேகம் மற்றும் அதிர்வெண்ணை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது. Blood Oxygen saturation (SpO2), இதய துடிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு போன்ற அளவீடுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்கின்றன.
புளூடூத் தொழில்நுட்பம் வழியாக Nova 7i அல்லது வேறு எந்த ஸ்மார்ட்போனுடனும் இணைக்கப்படும்போது, பயனர் உடற்பயிற்சி செய்யும் போது ஸ்மார்ட்போனை வைத்திருக்க தேவையில்லை. ஸ்மார்ட்வொட்ச் என்பது ஒரு சிறிய ஸ்மார்ட்போனாக மாறும், இது பயனர்களுக்கு அழைப்புகளுக்கு பதிலளிக்க / நிராகரிக்க, call historyயைக் காண மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதிகளை வழங்குகின்றது.
பொழுதுபோக்கின் போது இசையை ரசிக்க உயர்தரமான இசை தொழில்நுட்பம் முக்கியமானது. அந்த வகையில் Huawei Sound X ஆனது திடீரென உருவாகும் எண்ணங்களுக்கு சரியான பொருத்தமானதாக அமைகின்றது. உண்மையான இசை அனுபவத்திற்கு, பயனர் ஸ்மார்ட்போனை Huawei Sound X உடன் குறுக்கீடு இல்லாமல் இணைக்க முடியும். இது Devialet’s audio தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. Huawei Sound X ஆனது இரட்டை sub woofers மற்றும் high fidelity audio உடன் நிகழ்கால இசையையும் வழங்குகிறது.
Devialet’s Push-Push acoustic ஒலி வடிவமைப்பு ஸ்பீக்கருக்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருகிறது. அத்தோடு எந்த அளவிலும் சிதைவு இல்லாத இசையின் தரத்தையும் உறுதி செய்கின்றது. இரட்டை ஒலிபெருக்கிகள் தவிர, 6 சக்திவாய்ந்த tweetersகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது Huawei ஒலி வழிமுறையைப் பயன்படுத்தி சுவாரஸ்யமான சுற்று ஒலியை உருவாக்குகிறது.
Huawei Nova 7i, Huawei Watch GT2 Pro மற்றும் Huawei Sound X ஆகியவை அதன் பிரிவுகளில் உள்ள சிறந்த மூன்று சாதனங்களாகும். இவை இணைக்கப்படும்போது, பயனருக்கு அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுவதோடு, பொழுதுபோக்குக்கான ஏராளமான வாய்ப்புகளையும் தருகின்றது. Huawei Nova 7i ஆனது 47999 ரூபாவுக்கும், Huawei Watch GT2 Pro 54999 ரூபாவுக்கும் மற்றும் Huawei Sound X 57999 ரூபாவுக்கும் அனைத்து Huawei காட்சியறைகளிலும், நாடு முழுவதிலும் உள்ள சிங்கர் காட்சியறைகளிலும், அத்தோடு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் இணை வணிகங்களான Daraz.lk மற்றும் Singer.lk மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
Comment here